spot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாஅம்பானிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு - உச்சநீதிமன்றம்

அம்பானிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு – உச்சநீதிமன்றம்

-

- Advertisement -

முகேஷ் அம்பானிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நாட்டின் மிகவும் முக்கிய பிரமுகர்களுக்கு உளவுத்துறை கொடுக்கும் தகவலின் பேரில் மத்திய அரசு பாதுகாப்பு அளித்து வருகிறது. மேலும், இதற்கான செலவுகளை சம்பந்தப்பட்ட நபரே ஏற்றுக் கொண்டு வருகின்றனர்.

we-r-hiring

பிரபல தொழில் அதிபரும், ரிலையன்ஸ் குழுமத் தலைவருமான அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்து வருவதைத் தொடர்ந்து இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பான வழக்கு கிருஷ்ணா முராரி, அசானுதின் அமனுல்லா ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தின் பாதுகாப்பு உறுதி செய்வது தொடர்பாக மகாராஷ்டிரா அரசு மற்றும் உள்துறை அமைச்சகங்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

மேலும் இசட் பிளஸ் பாதுகாப்புக்கும் ஆகும் செலவை முகேஷ் அம்பானியின் குடும்பத்தினரே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அந்த அமர்வு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

MUST READ