spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'கொட்டுக்காளி' படத்தின் டிரைலர் ரிலீஸ் எப்போது?

‘கொட்டுக்காளி’ படத்தின் டிரைலர் ரிலீஸ் எப்போது?

-

- Advertisement -

சூரி நடிப்பில் உருவாகியுள்ள கொட்டுக்காளி படத்தின் டிரைலர் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.'கொட்டுக்காளி' படத்தின் டிரைலர் ரிலீஸ் எப்போது?

கடந்த 2021 ஆம் ஆண்டு கூழாங்கல் எனும் திரைப்படம் வெளியாகி பல்வேறு தரப்பினரிடையே பாராட்டுகளை பெற்றது. இந்த படத்தை பி எஸ் வினோத் ராஜ் இயக்கி இருந்தார். அதைத் தொடர்ந்து இவர், கொட்டுக்காளி எனும் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் சூரி கதாநாயகனாக நடிக்க அவருடன் இணைந்து அன்னா பென் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தனது எஸ்கே ப்ரோடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தயாரித்திருக்கிறார். ஏற்கனவே நடிகர் சூரி விடுதலை, கருடன் உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்திருந்த நிலையில் கொட்டுக்காளி திரைப்படத்திலும் அவர் கதாநாயகனாக நடித்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது. அதே சமயம் இந்த படம் ரிலீஸுக்கு முன்பாகவே பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது.'கொட்டுக்காளி' படத்தின் டிரைலர் ரிலீஸ் எப்போது? இந்நிலையில் இந்த படமானது வருகின்ற ஆகஸ்ட் 23 அன்று திரைக்கு வர இருக்கிறது. அதற்கான முழு ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. மேலும் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த படம் புதுவித அனுபவத்தை தரும் என்று நம்பப்படுகிறது. அடுத்ததாக இந்த படத்தின் கூடுதல் தகவல் என்னவென்றால், இதன் டிரைலர் இந்த வார இறுதிக்குள் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பை படக்குழிவினர் விரைவில் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ