spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'மெட்ராஸ்காரன்' படத்தின் முதல் பாடல் வெளியீடு!

‘மெட்ராஸ்காரன்’ படத்தின் முதல் பாடல் வெளியீடு!

-

- Advertisement -

மெட்ராஸ்காரன் படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.'மெட்ராஸ்காரன்' படத்தின் முதல் பாடல் வெளியீடு!

மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் முக்கியமான நடிகராக அறியப்படுபவர் ஷேன் நிகாம். இவருடைய நடிப்பில் வெளிவந்த இஷ்க், கும்பலாங்கி நைட்ஸ், RDX ஆகிய திரைப்படங்கள் மலையாள ரசிகர்களை மட்டுமல்லாமல் தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து வெற்றி படங்களாக அமைந்தன. அடுத்தது இவர் நேரடித் தமிழ் படம் ஒன்றில் அறிமுகமாகியுள்ளார். இந்த படத்திற்கு மெட்ராஸ்காரன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் இவருடன் இணைந்து கலையரசன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும் ஐஸ்வர்யா தத்தா, நிஹாரிகா பாண்டியராஜன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். எமோஷனல் கலந்த ஆக்சன் படமாக உருவாகி வரும் இந்த படத்தினை வாலி மோகன் தாஸ் எழுதி இயக்கியிருக்கிறார். சாம் சி எஸ் இந்த படத்திற்கு இசை அமைத்துள்ள நிலையில் பிரசன்னா எஸ் குமார் இதன் ஒளிப்பதிவு பணிகளையும் மேற்கொண்டுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே நிறைவடைந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக இப்படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

we-r-hiring

அதைத்தொடர்ந்து தற்போது இந்த படத்தில் இருந்து கை தக்க கல்யாணம் எனும் முதல் பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த பாடலை கபில் கபிலன் மற்றும் அபர்ணா ஆகிய இருவரும் பாடியிருக்கும் நிலையில் இளன் இந்த பாடல்வரிகளை எழுதி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ