Homeசெய்திகள்சினிமாமனசிலாயோ பாடலைத் தொடர்ந்து வெளியாகும் அடுத்த பாடல்..... ரஜினியின் 'வேட்டையன்' பட அப்டேட்!

மனசிலாயோ பாடலைத் தொடர்ந்து வெளியாகும் அடுத்த பாடல்….. ரஜினியின் ‘வேட்டையன்’ பட அப்டேட்!

-

ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் வேட்டையன் படத்தின் இரண்டாவது பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.மனசிலாயோ பாடலைத் தொடர்ந்து வெளியாகும் அடுத்த பாடல்..... ரஜினியின் 'வேட்டையன்' பட அப்டேட்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள வேட்டையன் திரைப்படம் வருகின்ற அக்டோபர் 10ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் உலகம் முழுவதும் திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. இந்த படத்தினை சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம் படத்தின் இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கியிருக்கிறார். லைக்கா நிறுவனத்தின் சார்பில் சுபாஸ்கரன் இந்த படத்தை தயாரித்துள்ளார். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இதில் ரஜினியுடன் இணைந்து அமிதாப் பச்சன், பகத் பாஸில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.  இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து மனசிலாயோ எனும் முதல் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

அடுத்தது வருகின்ற செப்டம்பர் 20ஆம் தேதி இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது. அதே நாளில் இந்த படத்தின் ஹண்டர் வந்தார் எனும் இரண்டாவது பாடல் வெளியாகும் என பட குழு ப்ரோமோ வீடியோ ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி இந்த பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ளார் என்பது தெரிய வந்திருக்கிறது.

MUST READ