Homeசெய்திகள்சினிமா'கங்குவா' படத்தின் இசை வெளியீட்டு விழா இந்த தேதியில்தான்!

‘கங்குவா’ படத்தின் இசை வெளியீட்டு விழா இந்த தேதியில்தான்!

-

- Advertisement -

கங்குவா படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல் வெளியாகியுள்ளது.'கங்குவா' படத்தின் இசை வெளியீட்டு விழா இந்த தேதியில்தான்!

நடிப்பின் நாயகன் சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் கங்குவா. இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்க ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் படத்தை மிகவும் பிரம்மாண்டமாக தயாரித்திருக்கிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைத்துள்ளார். வெற்றி பழனிசாமி இதன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். படத்தில் சூர்யா தவிர திஷா பதானி, கோவை சரளா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் வில்லனாக பாபி தியோல் நடித்திருக்கிறார். இப்படம் 3D தொழில்நுட்பத்தில் பீரியாடிக் படமாக தயாராகியுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி இருக்கும் இந்த படம் வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர இருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக இந்த படத்தின் டிரைலர் வெளியாகி எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக அதிகப்படுத்தியது. 'கங்குவா' படத்தின் இசை வெளியீட்டு விழா இந்த தேதியில்தான்!இதற்கிடையில் ஏற்கனவே இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்ததாக இதன் இரண்டாவது பாடல் வருகின்ற அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. அதேசமயம் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வருகின்ற அக்டோபர் 20ஆம் தேதி நடைபெற இருப்பதாகவும் இதன் ரிலீஸ் ட்ரெய்லர் அக்டோபர் 31ஆம் தேதி வெளியாக இருப்பதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இது தொடர்பான அறிவிப்புகள் இனிவரும் நாட்களில் அடுத்தடுத்து வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

MUST READ