நடிகர் விஷ்ணு விஷால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர். இவர் ஏகப்பட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். கடைசியாக இவரது நடிப்பில் லால் சலாம் திரைப்படம் வெளியாகி எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அடுத்தது இவர் ராட்சசன் பட இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் புதிய படம் ஒன்று நடித்து வருகிறார். மேலும் ஆர்யன், மோகன்தாஸ், ஓர் மாம்பழ சீசனில் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றிலும் நடிப்பதற்கு கமிட்டாகி இருக்கிறார் விஷ்ணு விஷால். இதற்கிடையில் இவர், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா, சிங்கப்பூர் சலூன் ஆகிய படங்களை இயக்கிய கோகுல் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிப்பதற்கு கமிட்டாகி இருந்தார். அதன்படி விஷ்ணு விஷால், கோகுல் கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படத்தினை விஷ்ணு விஷால்தான் தயாரிக்கப் போகிறார் என்று அறிவிப்பு வெளியானது. அதை தொடர்ந்து படப்பிடிப்புகளும் நடத்தப்பட்டு வந்ததாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் புதிதாக கிடைத்த தகவல் என்னவென்றால், இயக்குனர் கோகுல் விஷ்ணு விஷால் படத்திலிருந்து வெளியேறிவிட்டாராம். அதாவது கோகுல்- விஷ்ணு விஷால் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கோகுல் அப்பிடத்திலிருந்து வெளியேறி விட்டதாகவும், அவருக்கு பதிலாக வேறொரு இயக்குனரை களம் இறக்க விஷ்ணு விஷால் திட்டமிட்டுள்ளதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம் விஷ்ணு விஷாலுடன் வேல்ஸ் ஃபிலிம் நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது எனவும் சொல்லப்படுகிறது. மேலும் படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகள் அடுத்தடுத்த நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- Advertisement -