spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்... துணை முதலமைச்சரின் செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம்

ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்… துணை முதலமைச்சரின் செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம்

-

- Advertisement -

தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.

we-r-hiring

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் செயலாளராக பிரதீப் யாதவ்  ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். உயர்  கல்வித்துறை செயலாளராக கே.கோபால் நியமிக்கப்பட்டுள்ளார். மின்வாரிய தலைவராக இருந்த ராஜேஷ் லக்கானி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மின்வாரியத்தின் புதிய தலைவராக நந்தகுமார் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டு உள்ளார். கைத்தறித் துறை செயலாளராக அமுதவள்ளியும்,  வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநராக விஷ்ணு சந்திரனும் நியமிக்கப்பட்டுள்ளனர். கல்லூரி கல்வி இயக்குநராக சுந்தரவல்லி ஐ.ஏ.எஸ், சமூகநலத்துறை இயக்குநராக ஆர்.லில்லி ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டு உள்ளனர்.தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவுக்கு, கால்நடை பராமரிப்புத்துறை செயலாளர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.

"ஓட்டுக்கு பணம் கொடுப்பதும், வாங்குவதும் தவறு"- தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தகவல்!

இதேபோல், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை செயலளாளர் விஜயராஜ்குமாருக்கு, மனிதவள மேம்பாட்டுத்துறை பொறுப்பு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. பிரித்விராஜ் ஐ.ஏ.எஸ், சென்னை மாநகராட்சி துணை ஆணையராக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். பொதுத்துறை துணை செயலாளராக பவன்குமார் ஜி கிரியப்பனவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

MUST READ