புதுச்சேரியில் திமுக போட்டியிடும் தொகுதி எண்ணிக்கையை மு.க. ஸ்டாலின் சொல்லிவிட்டார்; அந்த அடிப்படையில் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. இந்த எண்ணிக்கை கட்சியினருக்கும், பொதுமக்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என திமுக எதிர்க்கட்சி தலைவர் சிவா சிறப்பு பேட்டியளித்துள்ளாா்.
புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவர் சிவா, “சன் நியூஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில், “புதுச்சேரியில் காங்கிரஸ்- திமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியது. அது வடிவம் பெற்ற பிறகு சொல்கிறோம்.
புதுச்சேரியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி தான் இருக்கும் என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வம் பெருந்தகை கருத்துக்கு பதில் அளித்த சிவா, அவங்க கட்சிகாரர்களை மகிழ்ச்சி அடைவதற்காக சொல்லி இருப்பார். அதில் எங்களுக்கு மாற்று கருத்து இல்லை. இந்திய கூட்டணி தலைவர் தளபதி ஸ்டாலின் என்ன நிலைபாடு எடுக்கிறாரோ? அது தான் எங்கள் நிலைப்பாடு என்றார்.

கூட்டணி தலைமை தொடர்பாக காங்கிரஸ் கட்சி, தனது கட்சிக்காரர்களை உற்சாகப்படுத்த பேசி இருப்பார்கள். தேர்தல் வெற்றிக்கு பிறகு தளபதியார் இது குறித்து முடிவெடுப்பார்.
திமுக போட்டியிடும் தொகுதி பங்கீடு தொடர்பாக, தமிழக முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்ட எண்ணிக்கையை எங்களிடம் சொல்லிவிட்டார். அதன் அடிப்படையில் பேச்சுவார்த்தை நடந்து கொண்டு இருக்கிறது. தொகுதி பங்கீடு எண்ணிக்கை தொண்டர்களுக்கும், பொதுமக்களும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்று கூறினாா்.
