திருவள்ளூர் நெடுஞ்சாலை பணி: எம்.பி. ஜெயகுமார் ஆய்வு!
திருவள்ளூர் முதல் ஸ்ரீபெரும்புதூர் வரை நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளை திருவள்ளூர் எம்.பி.யும் காங்கிரஸ் செயல் தலைவருமான ஜெயகுமார் ஆய்வு செய்தார். திருவள்ளூர் முதல் ஸ்ரீபெரும்புதூர் வரை நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் போலிவாக்கம் முதல் மணவாளன் நகர் வரை 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடந்து சென்று திருவள்ளூர் எம்.பி.யும் காங்கிரஸ் தலைவருமான ஜெயக்குமார் ஆய்வு செய்தார். அப்போது நெடுஞ்சாலை விரிவாக்கம் பணி மந்தநிலையில் நடைபெற்று வருவதாக கூறினார்.


மேலும் திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர், போலிவாக்கம் மேல்நல்லாத்தூர் வெங்கத்தூர், மணவாளன் நகர் வரை 4.1 கிலோ மீட்டர் நெடுஞ்சாலை விரிவாக்க பணிகளில் முறைகேடு நடப்பதாக கிராம மக்கள் அவரிடம் தெரிவித்தனர். மழை நீர் வடிகால் பணிக்கு தோண்டிய மண்ணை எடுத்து சட்டவிரோதமாக விற்பனை செய்துள்ளதாகவும் இதன் மூலம் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்துள்ளதாக கிராம மக்கள் எம்பி ஜெயக்குமாரிடம் புகார் தெரிவித்தனர்
