spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஇயக்குனராக மாறும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா..... ஹீரோ யார் தெரியுமா?

இயக்குனராக மாறும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா….. ஹீரோ யார் தெரியுமா?

-

- Advertisement -

இசைஞானி இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா, இளையராஜாவைப் போலவே தனது தனித்துவமான இசையினால் ஏராளமான ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார்.இயக்குனராக மாறும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா..... ஹீரோ யார் தெரியுமா? அந்த வகையில் இவர் தீனா, நந்தா, ராம், காதல் கொண்டேன், மங்காத்தா உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இவரது இசையில் வெளியான பெரும்பாலான பாடல்கள் ரசிகர்கள் பலரின் ஃபேவரிட் பாடல் ஆகும். இவர் கடைசியாக விஜய் நடிப்பில் வெளியான கோட் படத்திற்கு இசையமைத்திருந்தார். அடுத்தது சர்தார் 2 திரைப்படத்தில் இசையமைப்பாளராக கமிட்டாகி இருக்கிறார். அதே சமயம் இவர் தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார். இந்நிலையில் யுவன் சங்கர் ராஜா இயக்குனராக மாறப் போகிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. இயக்குனராக மாறும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா..... ஹீரோ யார் தெரியுமா?இது தொடர்பாக சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் யுவன் சங்கர் ராஜாவே தான் புதிதாக படம் ஒன்றை இயக்கப் போவதாகவும் அந்த படத்தில் சிம்புவை ஹீரோவாக நடிக்க வைக்க போவதாகவும் தெரிவித்திருக்கிறார். இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் இன்ப அதிர்ச்சியை தந்ததோடு எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்தி உள்ளது. இனிவரும் நாட்களில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

யுவன் சங்கர் ராஜா ஏற்கனவே சிம்புவின் வல்லவன், மன்மதன், வானம், சிலம்பாட்டம் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ