spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுவெம்பக்கோட்டை  3-ஆம் கட்ட அகழாய்வு; சுடுமண்ணால் ஆன மணி, காதணி கண்டெடுப்பு!

வெம்பக்கோட்டை  3-ஆம் கட்ட அகழாய்வு; சுடுமண்ணால் ஆன மணி, காதணி கண்டெடுப்பு!

-

- Advertisement -

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் 3-ஆம் கட்ட அகழாய்வில் சுடுமண்ணால் ஆன மணி, காதணி மற்றும் சங்கு வளையல் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.

we-r-hiring

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளம் வைப்பாற்றின் வடகரையில் மேட்டுக்காடு பகுதியில் 3-ஆம் கட்ட அகழாய்வு பணிகள் கடந்த ஜூன் 18-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய நுண் கற்காலத்தை அறியும் வகையில் நடைபெறும் இந்த அகழாய்வில்  இதுவரை கண்ணாடி மணிகள் கல்மணிகள், சூதுபவள கல் மணிகள், முழுமையான சங்கு வளையல், பழங்கால சிகை அலங்காரத்துடன் பெண்ணின் தலைப்பகுதி, கி.பி 16-ம் நூற்றாண்டு நாயக்கர் கால செப்புக் காசு, அணிகலன்கள், திமிலுடன் கூடிய காளை உருவ பொம்மை உள்ளிட்ட 1,800க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்துள்ளன.

இந்த நிலையில் வெம்பக்கோட்டை அகழாய்வில் தற்போது சுடுமண்ணால் ஆன மணி, காதணி, சங்கு வளையல் உள்ளிட்டவை கண்டெடுக்கப்ட்டுள்ளன. இதன் மூலம் முன்னோர்கள் அலங்கரிக்கப்பட்ட அணிகலன்களை கைகளால் தயாரித்து அணிந்துள்ளது தெரிய வந்துள்ளது.

MUST READ