spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாமீண்டும் சிறுத்தை சிவாவுடன் கூட்டணி அமைக்கும் நடிகர் கார்த்தி!

மீண்டும் சிறுத்தை சிவாவுடன் கூட்டணி அமைக்கும் நடிகர் கார்த்தி!

-

- Advertisement -

கார்த்தி மற்றும் சிறுத்தை சிவா கூட்டணி மீண்டும் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.மீண்டும் சிறுத்தை சிவாவுடன் கூட்டணி அமைக்கும் நடிகர் கார்த்தி!நடிகர் கார்த்தி கடைசியாக மெய்யழகன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து வா வாத்தியார், கார்த்தி 29 போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் சர்தார் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி. இந்நிலையில் நடிகர் கார்த்தி, சிறுத்தை சிவா இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க இருப்பதாகவும் இது தொடர்பான ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் புதிய தகவல் வெளியாகி வருகிறது.

அதாவது கடந்த 2011ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் சிறுத்தை எனும் திரைப்படம் வெளியானது. சிறுத்தை சிவா இந்த படத்தை இயக்கியிருந்த நிலையில் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது.மீண்டும் சிறுத்தை சிவாவுடன் கூட்டணி அமைக்கும் நடிகர் கார்த்தி! எனவே மீண்டும் சிறுத்தை சிவா, கார்த்தி கூட்டணியில் புதிய படம் உருவாக இருக்கும் தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

we-r-hiring

ஏற்கனவே சிறுத்தை சிவா சூர்யா நடிப்பில் கங்குவா திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் நடிகர் கார்த்தி வில்லனாக நடித்திருக்கிறார் என பல தகவல்கள் சமூக வலைதளங்களில் உலா வருகிறது. ஆகையினால் சிறுத்தை சிவா மற்றும் கார்த்தி ஆகியோர் மூன்றாவது முறையாக இணைய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ