spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'கங்குவா' படத்தின் ஓடிடி ரிலீஸ் அப்டேட் இதோ!

‘கங்குவா’ படத்தின் ஓடிடி ரிலீஸ் அப்டேட் இதோ!

-

- Advertisement -

கங்குவா படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

சூர்யா நடிப்பில் கடந்த நவம்பர் 14ஆம் தேதி கங்குவா எனும் திரைப்படம் வெளியானது. 'கங்குவா' படத்தின் ஓடிடி ரிலீஸ் அப்டேட் இதோ!இந்த படத்தினை சிறுத்தை சிவா இயக்க ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் படத்தை தயாரித்திருந்தது. தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். வெற்றி பழனிசாமி இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருந்தார். பீரியாடிக் கதைக்களத்தில் இந்த படம் வெளியானது. நடிகர் சூர்யா இந்த படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்க அவருடன் இணைந்து திஷா பதானி , பாபி தியோல், நட்டி நடராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். 3D தொழில்நுட்பத்தில் மிகப்பிரமாண்டமான பட்ஜெட்டில் உருவாகியிருந்த இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது. சூர்யாவிற்கும் சிறுவன் ஒருவனுக்கும் இடையிலான உறவை மையமாக வைத்து வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படம் திரைக்கு வருவதற்கு முன்பாக ஆயிரம் கோடி வசூலை தாண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 'கங்குவா' படத்தின் ஓடிடி ரிலீஸ் அப்டேட் இதோ!ஆனால் இந்தப் படம் சரிவை சந்தித்ததால் 150 கோடி வரை தான் வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படம் வருகின்ற டிசம்பர் 13ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில்
அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. பலரும் இந்த படத்தை ட்ரால் செய்து கடுமையான விமர்சனங்களை தெரிவித்து வந்த நிலையில் ஒரே மாதத்திற்குள் இந்த படம் ஓடிடியில் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ