spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஎனக்கு பொண்ணு கொடுத்ததே பெரிய விஷயம்.... மேடையில் மாமனார் குறித்து பேசிய சிவகார்த்திகேயன்!

எனக்கு பொண்ணு கொடுத்ததே பெரிய விஷயம்…. மேடையில் மாமனார் குறித்து பேசிய சிவகார்த்திகேயன்!

-

- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த தீபாவளி தினத்தின் அமரன் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து SK 23, SK 24, SK 25 என அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி தொடர்ந்து பிஸியாக நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். எனக்கு பொண்ணு கொடுத்ததே பெரிய விஷயம்.... மேடையில் மாமனார் குறித்து பேசிய சிவகார்த்திகேயன்!இந்நிலையில் தான் நேற்று (ஜனவரி 3) ஆகாஷ் முரளி மற்றும் அதிதி சங்கர் நடித்திருக்கும் நேசிப்பாயா படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். அப்போது மேடையில் தன்னுடைய மாமனார் குறித்து பேசி உள்ளார் சிவகார்த்திகேயன். எனக்கு பொண்ணு கொடுத்ததே பெரிய விஷயம்.... மேடையில் மாமனார் குறித்து பேசிய சிவகார்த்திகேயன்!அவர் பேசியதாவது, “எனக்கு என் மாமனார் ரொம்ப ஸ்பெஷல். நான் விஜய் டிவியில் 4500 க்கு தான் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது எனக்கு பொண்ணு கொடுத்ததே பெரிய விஷயம். என்னுடைய தாய் மாமன் தான் அவர். அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள். அப்போது என் அப்பாவும் இறந்து விட்டதால் அவருடைய பிசினஸ் எல்லாத்தையும் விட்டுவிட்டு எங்களை கவனித்துக் கொண்டார். அதேசமயம் அவருடைய மகளையும் எனக்கு திருமணம் செய்து கொடுத்தார். மேலும் அவர் ‘என் மகளை கல்யாணம் பண்ணி கொடுத்து இருக்கிறேன் போய் வேலைக்கு போடா என்று சொல்லாமல் உன் கனவை நோக்கி போடா’ என்று சொன்னார்.எனக்கு பொண்ணு கொடுத்ததே பெரிய விஷயம்.... மேடையில் மாமனார் குறித்து பேசிய சிவகார்த்திகேயன்!‘அவன் சினிமாவிற்கு போகவேண்டும் என்று நினைக்கிறான். அவளுக்கு சப்போர்ட் பண்ணுவோம்’ என்று எனக்கு உறுதுணையாக நின்றார். இந்த மேடையில் அவருக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன்” என்று மாமனார் குறித்து பேசி நெகிழ்ச்சி அடைந்துள்ளார் சிவகார்த்திகேயன்.

MUST READ