டெல்லி சட்ட பேரவைக்கான தேர்தல் நெருங்கும் நிலையில் முதற்கட்டமாக பாரதிய ஜனத கட்சி 29 பேர் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. ஆம் ஆத்மி கட்சியில் அமைச்சர் பதவியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த கைலாஷ் கெலாட்டிற்கு பிஜ்வாசன் தொகுதியில் போட்டியிட பாஜக வாய்ப்பளித்துள்ளது.
70 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு பிப்ரவரி மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி ஏற்கனவே 5 கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் கடந்த மாதம் டெல்லி சட்டமன்ற தேர்தலுக்கான மத்திய தேர்தல் குழு கூட்டம் பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது .

அதில்முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை இறுதி செய்து இன்று வேட்பாளர்கள் பட்டியலை பாஜக தலைமை வெளியிட்டுள்ளது. அதில் 29 சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது. அதில் டெல்லியின் அமைச்சராகவும் ஆம் ஆத்மி கட்சியின் நிர்வாகியாகவும் இருந்து விலகி பாஜகவில் இணைந்த கைலாஷ் கெலாட்க்கு, பிஜ்வாசன் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட பாஜக தலைமை வாய்ப்பு வழங்கியுள்ளது.
இதேபோல் நட்சத்திர தொகுதியான கல்காஜி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் டெல்லி முதலமைச்சர் அதிசி , காங்கிரஸ் தேசிய மகளிர் அணி தலைவர் அல்கா லம்பா உள்ளிட்டோரை எதிர்த்து பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் பிதுரி வேட்பாளராக போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது . இம்முறை நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் 70 சட்டமன்ற தொகுதிகளிலும் பாரதிய ஜனதா கட்சி தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
விஜய் கட்சியில் தடுக்கும் புஸ்ஸி… தனிக் கட்சி தொடங்கும் ஆதவ் அர்ஜூன்..?