spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு+1, +2  செய்முறைத் தேர்வுகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

+1, +2  செய்முறைத் தேர்வுகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

-

- Advertisement -

பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 செய்முறைத் தேர்வுகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு தேர்வுகள் இயக்ககம்  வெளியிட்டுள்ளது.

we-r-hiring

இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும், அரசு தேர்வுகள் துறை இயக்குனர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகளை பிப்ரவரி 7ஆம் தேதி முதல் 14ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதேபோல் பிளஸ் 1 பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான செய்முறை தேர்வை பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கி 21ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாளை 12- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்!

மேலும் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 செய்முறைத் தேர்வுகளை எழுதும் உடல் இயக்கக் குறைபாடு, பார்வை குறைபாடு மற்றும் செவித்திறன் குறைபாடு உள்ள  மாற்றுத்திறனாளி தேர்வர்களது விருப்பத்தின் பேரில் செய்முறை தேர்வின்போது ஆய்வ உதவியாளர்களை நியமிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், உடல் இயக்கக் குறைபாடு, பார்வை குறைபாடு மற்றும் செவித்திறன் குறைபாடு உள்ள  மாற்றுத்திறனாளி தேர்வர்களது விருப்பத்தின் பேரில் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களில் மட்டும் செய்முறை தேர்வுகளுக்கு பதிலாக செய்முறை தொடர்பான கொள்குறி வகை வினாக்கள் அடங்கிய வினாதாட்கள் வழங்கி செய்முறை தேர்வு செய்துகொள்ள உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

MUST READ