அன்புஜோதி ஆசிரமத்தில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட 5 பேர் தப்பியோட்டம்
அன்புஜோதி ஆசிரமத்தில் இருந்து அழைத்து வரப்பட்டு, கடலூர் அரசு கூர்நோக்கு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த 6 பேர் தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமத்தில் தங்கியிருந்த ஆதரவற்றவர்கள் 25 பேர் கடலூரில் உள்ள தொண்டு நிறுவனத்திற்கு அழைத்து வரப்பட்டனர். கடலூர் தொண்டு நிறுவனத்தில் தங்கியிருந்த இவர்களில் 5 பேர் கதவை உடைத்து மாடியில் இருந்து போர்வையை கயிறாக மாற்றி அதன் வழியாக கீழே குதித்து தப்பி ஓடினர். தப்பி ஓடிய 5 பேரை போலீசார் உதவியுடன் தேடி வருகின்றனர்.
கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி இதே இடத்திலிருந்து நான்கு பேர் தப்பி ஓடிய நிலையில் அவர்கள் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டது. தற்பொழுது மீண்டும் ஐந்து பேர் தப்பி ஓடி இருப்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் யாருடைய தூண்டுதல் பெயரிலோ தப்பி ஓடுகிறார்களா? அல்லது அவர்களாகவே தப்பி ஓடிவிடுகிறார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரம வழக்கை தற்பொழுது சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.



