Homeசெய்திகள்சினிமாவிஜய் சேதுபதி பிறந்தநாள் ட்ரீட்.... இன்று வெளியாகும் 'ஏஸ்' பட கிளிம்ப்ஸ்!

விஜய் சேதுபதி பிறந்தநாள் ட்ரீட்…. இன்று வெளியாகும் ‘ஏஸ்’ பட கிளிம்ப்ஸ்!

-

- Advertisement -

விஜய் சேதுபதி பிறந்தநாளான இன்று ஏஸ் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.விஜய் சேதுபதி பிறந்தநாள் ட்ரீட்.... இன்று வெளியாகும் 'ஏஸ்' பட கிளிம்ப்ஸ்!

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் வலம் வரும் முக்கியமான நடிகர்களில் ஒருவர் ஆவார். இவரது நடிப்பில் கடைசியாக விடுதலை பாகம் 2 திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றது. அடுத்தது இவரது நடிப்பில் உருவாகியுள்ள காந்தி டாக்ஸ், ட்ரெயின் ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன. மேலும் இவர் பல புதிய படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இதற்கிடையில் இவர் ஆறுமுக குமார் இயக்கத்தில் ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் எனும் திரைப்படத்தில் ஏற்கனவே நடித்திருந்தார். தற்போது இந்த கூட்டணி மீண்டும் ஏஸ் என்ற திரைப்படத்தில் இணைந்திருக்கிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து ருக்மினி வசந்த், பப்லு ப்ரித்விராஜ், யோகி பாபு மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். இந்த படத்தை 7CS என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. ஜஸ்டின் பிரபாகரன் இதற்கு இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்து அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. விஜய் சேதுபதி பிறந்தநாள் ட்ரீட்.... இன்று வெளியாகும் 'ஏஸ்' பட கிளிம்ப்ஸ்!இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதியின் பிறந்த நாளான இன்று (ஜனவரி 16) அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் ஏஸ் படத்திலிருந்து கிளிம்ப்ஸ் வீடியோ இன்று மாலை 6 மணி அளவில் வெளியாகும் என புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.

MUST READ