spot_imgspot_imgspot_imgspot_img
HomeBreaking Newsசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகும் '2K லவ் ஸ்டோரி' படத்தின் டிரைலர் வெளியீடு!

சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகும் ‘2K லவ் ஸ்டோரி’ படத்தின் டிரைலர் வெளியீடு!

-

- Advertisement -

சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகும் 2K லவ் ஸ்டோரி படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகும் '2K லவ் ஸ்டோரி' படத்தின் டிரைலர் வெளியீடு!

தமிழ் சினிமாவில் சுசீந்திரன் ஒரு இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராகவும், தயாரிப்பாளராகவும், பாடல் ஆசிரியராகவும் வலம் வருகிறார். இவர் கடைசியாக குற்றம் குற்றமே எனும் திரைப்படத்தை இயக்கியிருந்தார். அதைத்தொடர்ந்து இவர் 2K லவ் ஸ்டோரி எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் அறிமுக நடிகர் ஜெகவீர் கதாநாயகனாக நடிக்க மீனாட்சி கோவிந்தராஜன் கதாநாயகியாக நடித்திருக்கிறார். மேலும் இவர்களுடன் இணைந்து பால சரவணன், வினோதினி, சிங்கம்புலி மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். சிட்டி லைட் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க டி இமான் இதற்கு இசை அமைத்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து படமானது 2025 பிப்ரவரி 14ஆம் தேதி திரைக்கு வரும் முழு வீச்சில் தயாராகி வருகிறது.

we-r-hiring

இதற்கிடையில் ரொமான்டிக் காதல் கதை களத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்களும், பாடல்களும், டீசரும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் சுசீந்திரனின் மற்ற படங்களை போல் இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ