spot_imgspot_imgspot_imgspot_img
HomeBreaking Newsரவி மோகன் நடிக்கும் 'RM 34' படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு!

ரவி மோகன் நடிக்கும் ‘RM 34’ படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு!

-

- Advertisement -

ரவி மோகன் நடிக்கும் ‘RM 34’ படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி உள்ளது.ரவி மோகன் நடிக்கும் 'RM 34' படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு!ரவி மோகன் தமிழ் சினிமாவில் ஜெயம், சந்தோஷ் சுப்ரமணியம், சம்திங் சம்திங், தனி ஒருவன் என ஏகப்பட்ட வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இவரது நடிப்பில் கடந்த பொங்கல் தினத்தை முன்னிட்டு காதலிக்க நேரமில்லை திரைப்படம் வெளியானது. அதன் பின்னர் ரவி மோகன், தொடர்ந்து பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில், டாடா படத்தில் இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார் ரவி மோகன். இந்த படத்தில் ரவி மோகனுடன் இணைந்து தவ்தி ஜிவால், பிரதீப் ஆண்டனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

we-r-hiring

ரவி மோகனின் 34 வது படமான இந்த படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா நிறுவனம் தயாரிக்கிறது. ஆரம்பத்தில் இந்த படம் தொடர்பான அறிவிப்பு வெளியான போது ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது அவருக்கு பதிலாக சாம் சி எஸ் இசையமைக்கிறார். மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ரவி மோகன் நடிக்கும் 'RM 34' படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு!இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த படத்திற்கு கராத்தே பாபு என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த டீசரை பார்க்கும்போது ஏற்கனவே வெளியான தகவலின்படி இப்படம் அரசியல் கதைக்களம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நடிகர் ரவியும் இந்த படத்தில் அரசியல்வாதியாக நடித்திருக்கிறார். இந்த டீசர் ரசிகர்களை வெகுவாக கவரந்துள்ளது. எனவே இந்த டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.

MUST READ