spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபாக்ஸ் ஆபீஸ் மன்னனாக மாறும் பிரதீப்.... 'டிராகன்' முதல் நாள் வசூல் எவ்வளவு?

பாக்ஸ் ஆபீஸ் மன்னனாக மாறும் பிரதீப்…. ‘டிராகன்’ முதல் நாள் வசூல் எவ்வளவு?

-

- Advertisement -

டிராகன் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த அப்டேட் வெளியாகியிருக்கிறது.பாக்ஸ் ஆபீஸ் மன்னனாக மாறும் பிரதீப்.... 'டிராகன்' முதல் நாள் வசூல் எவ்வளவு?

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் நேற்று (பிப்ரவரி 21) ஆம் தேதி திரைக்கு வந்த படம் தான் டிராகன். லவ் டுடே படத்திற்குப் பிறகு பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்த நிலையில் முதல் நாளே நல்ல ஓப்பனிங் கிடைத்தது. அதன்படி ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் இந்த படம் பூர்த்தி செய்துள்ளது. ஃபுல் எனர்ஜியுடன் இறங்கி அடித்துள்ளார் பிரதீப். அஸ்வத் மாரிமுத்து ஓ மை கடவுளே படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு தரமான திரைக்கதையை தயார் செய்து ரசிகர்களுக்கு விருந்து படைத்துள்ளார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்று வெற்றி பாதையில் நகர்ந்து கொண்டு இருக்கிறது. இந்நிலையில் இப்படம் முதல் நாளில் உலக அளவில் ரூ. 10 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது என தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.பாக்ஸ் ஆபீஸ் மன்னனாக மாறும் பிரதீப்.... 'டிராகன்' முதல் நாள் வசூல் எவ்வளவு?

we-r-hiring

இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க லியோன் ஜேம்ஸ் இதற்கு இசையமைத்திருந்தார். இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் தவிர அனுபமா பரமேஸ்வரன், மிஸ்கின், கயடு லோஹர், கௌதம் வாசுதேவ் மேனன், ஜார்ஜ் மரியான் மற்றும் பலர் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ