நாடு முழுவதும் “இன்டெர்நெட்” கட்டணங்களை ஒழுங்குபடுத்த கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்.
நாடு முழுவதும் இணைய சேவைகளின் கட்டணங்களை ஒழுங்குபடுத்த கோரி உச்சநீதிமன்றத்தில் ரஜத் என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கு இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா அமர்வில் விசாரணைக்கு தொடங்கியதும் மனுவை பார்த்த தலைமை நீதிபதி, இந்தியாவில் திறந்தவெளி சந்தையாக தொலைத்தொடர்பு விற்பனை உள்ள நிலையில் மக்கள் அவர்களுக்கு என்ன தேவையோ அதனை வாங்கி கொள்கிறார்கள்.

ஏன்? பி.எஸ்.என்.எல் , எம்.டி.என்.எல் உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கூட இணைய சேவையை நாட்டில் வழங்குகின்றனரே என தெரிவித்தனர். அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இணைய சேவையை தேர்ந்தெடுக்க மக்களுக்கு பல நிறுவனங்கள் உண்டு என்றாலும் இந்தியாவில் பயன்படுத்தப்படும் இணைய சேவையின் 80 சதவீதம் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ பிரிவிடம் உள்ளதாகவும், எனவே கட்டண ஒழுங்குமுறை தேவை என கூறினார்.
இருப்பினும் மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்த தலைமை நீதிபதி, இத்தகைய கோரிக்கை தொடர்பாக இந்தியப் போட்டி ஆணையத்திடம் (Competition Commission of India) முறையிடுமாறு அறிவுறுத்தல் வழங்கி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளாா். இந்தியாவில் 2024 ஏப்ரல் மாத நிலவரப்படி 95.4 கோடி இணைய சேவை பயனாளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல்வர் மருந்தகங்கள் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு!