spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபாக்ஸ் ஆஃபிஸ் ரெட் டிராகன்.... தமிழகத்தில் அதிக வசூலை அள்ளும் 'குட் பேட் அக்லி'!

பாக்ஸ் ஆஃபிஸ் ரெட் டிராகன்…. தமிழகத்தில் அதிக வசூலை அள்ளும் ‘குட் பேட் அக்லி’!

-

- Advertisement -

குட் பேட் அக்லி படத்தின் வசூல் குறித்த புதிய அப்டேட் வெளியாகி இருக்கிறது.பாக்ஸ் ஆஃபிஸ் ரெட் டிராகன்.... தமிழகத்தில் அதிக வசூலை அள்ளும் 'குட் பேட் அக்லி'!

அஜித் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான விடாமுயற்சி திரைப்படம் சில ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்றாலும் சில ரசிகர்களை இந்த படம் திருப்திப்படுத்தவில்லை. எனவே அதைத்தொடர்ந்து அஜித் ரசிகர்கள், குட் பேட் அக்லி படத்தினை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருந்தனர். அதன்படி படம் கடந்த ஏப்ரல் 10 அன்று உலகம் முழுவதும் திரையிடப்பட்டது. திரையிடப்பட்ட முதல் நாளில் இருந்தே ஜெனரல் ஆடியன்ஸ் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் அஜித் ரசிகர்களுக்கு இந்த படம் தரமான விருந்தாக அமைந்தது. பாக்ஸ் ஆஃபிஸ் ரெட் டிராகன்.... தமிழகத்தில் அதிக வசூலை அள்ளும் 'குட் பேட் அக்லி'!எனவே பலரும் இப்படத்தை திருவிழா போல் கொண்டாடி தீர்த்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் அஜித்தின் தீவிர ரசிகனான ஆதிக், ரசிகர்கள் அஜித்தை எப்படி எல்லாம் பார்க்க நினைத்தார்களோ அப்படி எல்லாம் காட்டி இருந்தார். எனவே அவரையும் புகழ்ந்து தள்ளி வருகின்றனர். இது தவிர பழைய பாடல்களும் குட் பேட் அக்லி படத்திற்கு கை கொடுத்திருக்கின்றன. இந்த நிலையில் இப்படம் குறுகிய நாட்களில் ரூ. 200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது என படக்குழு சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

we-r-hiring

அதாவது அஜித்தின் சினிமா கேரியரில் அதிக வசூலை வாரிக் குவித்த பெருமையை குட் பேட் அக்லி திரைப்படம் பெற்றுள்ளது. தற்போது இதன் கூடுதல் தகவல் என்னவென்றால், இரண்டாவது வாரமாக வெற்றி நடைபோட்டு வரும் இப்படம் தற்போது வரை உலக அளவில் ரூ.250 கோடி வசூலித்திருப்பதாகவும், தமிழ்நாட்டில் மட்டும் ரூ.135 கோடி வரை வசூல் செய்திருப்பதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல் ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை தந்துள்ளது. எனவே இனிவரும் நாட்களில் இந்த படத்தின் வசூல் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ