பராசக்தி படக்குழு அதர்வாவின் பிறந்தநாள் ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் பாணா காத்தாடி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் அதர்வா. அதை தொடர்ந்து இவர், பரதேசி, சண்டிவீரன், ஈட்டி, இமைக்கா நொடிகள் என பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இவர் தற்போது நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகும் டிஎன்ஏ, ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் உருவாகும் இதயம் முரளி ஆகிய படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இதற்கிடையில் இவர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் பராசக்தி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படமானது சிவகார்த்திகேயனின் 25 வது படமாகும். இதில் ரவி மோகன் வில்லனாக நடிக்கிறார். டான் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. ஜி.வி. பிரகாஷ் இதற்கு இசையமைக்கிறார். இந்தி திணைப்பை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நடிகர் அதர்வா வித்தியாசமான தோற்றத்தில் நடிக்கிறார். இவருடைய கதாபாத்திரம் வலுவான கதாபாத்திரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இன்று (மே 7) பிறந்தநாள் கொண்டாடும் அதர்வாவிற்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக பராசக்தி படக்குழு ஸ்பெஷல் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.