தக் லைஃப் ட்ரைலர் வெளியாகும் நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கமல்ஹாசனின் 234 வது திரைப்படமாக உருவாகியுள்ள படம் தான் தக் லைஃப். இந்த படத்தை கமல்ஹாசன் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் தயாரித்திருக்கும் நிலையில் மணிரத்னம் இந்த படத்தை இயக்கியுள்ளார். ஏ.ஆர். ரகுமான் இதற்கு இசையமைத்திருக்கிறார். இதில் கமல்ஹாசன் உடன் இணைந்து சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும் திரிஷா, அசோக் செல்வன் ஜோஜு ஜார்ஜ் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். ஆக்சன் கலந்த கதைக்களத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி உள்ள இந்த படம் அடுத்த மாதம் 5ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து டீசரும், ஜிங்குஜா எனும் பாடலும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும் வருகின்ற மே 24ஆம் தேதி இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாய்ராம் கல்லூரியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதற்கிடையில் நாளை (மே 17) இப்படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆகும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது டிரைலர் ரிலீஸ் நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை மாலை 5 மணியளவில் டிரைலர் வெளியாகும் என படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்திருக்கிறது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.