Homeசெய்திகள்சினிமாசிபி சத்யராஜ் நடிப்பில் வெளியான 'டென் ஹவர்ஸ்' ஓடிடியில் வெளியானது!

சிபி சத்யராஜ் நடிப்பில் வெளியான ‘டென் ஹவர்ஸ்’ ஓடிடியில் வெளியானது!

-

- Advertisement -

சிபி சத்யராஜ் நடிப்பில் வெளியான டென் ஹவர்ஸ் திரைப்படம் ஓடிடியில் வெளியாகி உள்ளது.சிபி சத்யராஜ் நடிப்பில் வெளியான 'டென் ஹவர்ஸ்' ஓடிடியில் வெளியானது!

தமிழ் சினிமாவில் சிபி சத்யராஜ், ஸ்டுடென்ட் நம்பர் 1 என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து தனது தந்தை சத்யராஜ் உடன் இணைந்து வெற்றிவேல் சக்திவேல், கோவை பிரதர்ஸ் ஆகிய படங்களில் நடித்து பெயர் பெற்றார். இது தவிர நாய்கள் ஜாக்கிரதை, ஜாக்சன் துரை, மாயோன், சத்யா போன்ற வெற்றி படங்களிலும் நடித்திருக்கிறார். மேலும் இவரது நடிப்பில் உருவாகி இருந்த டென் ஹவர்ஸ் திரைப்படம் கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி திரைக்கு வந்தது. இப்படத்தில் சிபி சத்யராஜ் கேஸ்ட்ரோ என்ற கதாபாத்திரத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். ஒரே நாள் இரவில் நடக்கும் கிரைம் திரில்லர் படமாக வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் இந்த படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.சிபி சத்யராஜ் நடிப்பில் வெளியான 'டென் ஹவர்ஸ்' ஓடிடியில் வெளியானது!

டென் ஹவர்ஸ் திரைப்படத்தினை இளையராஜா கலியபெருமாள் இயக்க ஃபைவ் ஸ்டார் நிறுவனமும், டுவின் ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்திருந்தது. கே. சுந்தரமூர்த்தி இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். ஜெய் கார்த்திக் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ