திருச்செந்தூர் கொரோனாவிற்கு பிறகு உலகப் பொருளாதாரத்தில் இந்தியா மூன்றாவது இடத்திற்கு உயர்ந்துள்ளதாக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு இன்று வருகை தந்தார். அப்போது கோவில் நிர்வாகம் சார்பில் கும்பம் மரியாதை செலுத்தப்பட்டு செலுத்தப்பட்டு அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து கோவிலுக்குள் சென்று மூலவரான முருகனை வழிபட்டார். பின்னர் கோவில் உட்பிராரத்தில் உள்ள பெருமாள் மற்றும் சண்முகர் சன்னதிகளுக்கும்சென்று அங்குள்ள தெய்வங்களையும் வணங்கினார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், “நாம் அனைவரும் தடுப்பூசி எடுத்துக் கொண்டதின் விளைவாகத்தான் இறைவனைப் சென்று தரிசிக்க முடிகிறது. இதனை ஏற்படுத்திக் கொடுத்த பாரத பிரதமர் மற்றும் நடைமுறைப்படுத்திய மாநில அரசுக்கும் அதை எடுத்துக்கொண்ட மக்களுக்கும் நன்றி கூறுகிறேன். மேலும் ஜி 20 மாநாடு என்பது நமது நாட்டுக்கு பெருமை சேர்க்கிறது, உலகின் குருவாக இந்தியா இருப்பதற்கான கனவு நினைவாகி கொண்டிருக்கிறது. கொரோனாவிற்கு பிறகு இந்தியா உலகப் பொருளாதாரத்தில் மூன்றாவது இடத்திற்கு உயர்ந்துள்ளது . இருந்தாலும் கொரோனாவின் தாக்கம் இன்றும் இருப்பதால் மக்கள் அனைவரும் பூஸ்டர் தடுப்பூசி எடுத்துக்கொண்டு தங்களை காத்துக் கொள்ள வேண்டும் ” எனக் கூறினார்.


