Homeசெய்திகள்தமிழ்நாடுமும்மொழி கொள்கையை கொண்டுவர அதிமுகவிடம் பாஜக வலியுறுத்துவதில் தவறு ஒன்றும் இல்லை - சரத்குமாா் பேட்டி

மும்மொழி கொள்கையை கொண்டுவர அதிமுகவிடம் பாஜக வலியுறுத்துவதில் தவறு ஒன்றும் இல்லை – சரத்குமாா் பேட்டி

-

- Advertisement -

தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை கொண்டுவர அதிமுகவிடம் பாஜக வலியுறுத்தும்; அவ்வாறு வலியுறுத்துவதில் என்ன தவறு உள்ளது- பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் சரத்குமார்  பேட்டியளித்துள்ளாா்.சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தேர்தல் ஊடக அலுவலகத்தை ஒன்றிய அமைச்சரும், தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளருமான பியூஸ் கோயல் இன்று திறந்து வைத்தார். இதற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் சரத்குமார், “தமிழ்நாட்டில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

திமுகவில் உள்ள சிவாஜி கிருஷ்ணமூர்த்தி எப்போதும் கீழ்தரமாகவும் கேவலமாகவும் பேசி வருகிறார். அவர் தான் அந்த செயலை ஆரம்பித்தார். அவர் மீது நிரந்தரமாக நடவடிக்கை எடுக்காமல் தற்காலிகமாக நடவடிக்கை எடுத்து மீண்டும் கட்சியில் சேர்த்து தொடர்ந்து அவ்வாறே பேசி வருகிறார்.

we-r-hiring

யாராக இருந்தாலும் தனிபட்ட தாக்குதல் இல்லாமல் பேச வேண்டும், அவர் மட்டும் (உதயநிதி) எடப்பாடி பழனிசாமி அவர்களை தவழ்ந்து சென்று முதல்வரானார் கூறுவது ஏற்க முடியுமா?

பால்டாயில் பற்றி தான் பேச விரும்பவில்லை. வடக்கில் இருந்து தெற்குவரை காலில் விழும் கலாச்சாரம் என்பது மரியாதை தொடர்பானது. அதுகுறித்து தொடர்ந்து திமுகவினர் பேசும் போது அதற்கு பதிலடியாகவே எடப்பாடி பழனிசாமியும் பேசுகிறார். ஜனநாயகன் படம் வெளியானது குறித்து சைபர் கிரைம், காவல்துறையில் புகாரளித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜனநாயகன் திரைப்படம் வெளிவந்து அதனை யார் வெளியிட்டார்கள் என உடனே கண்டுபிடிக்க வேண்டும். சினிமாவில் பல பேரின் உழைப்பு உள்ளது. அந்த உழைப்பை திருடுவதற்கு சமம்.

ஜனநாயகன் முழு படமும் இணையத்தில் வெளிவந்தததை அரசியலாக்க கூடாது. ஆதவ் அர்ஜூனா அனைத்தையும் அரசியாலாக்குகிறார். இந்த விவகாரத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேட கூடாது.  ஜனநாயகன் திரைப்படத்தை மத்திய அரசோ தணிக்கை வாரியமோ கசியவிட்டது என்பது தவறான குற்றச்சாட்டு. நடக்க சாத்தியமில்லாத குற்றச்சாட்டு. தமிழக வெற்றிக் கழகத்திற்கு வரும் தனிப்பட்ட பிரச்சினைகள் அனைத்தையும் அரசிலாக்கக் கூடாது. எந்தப் பிரச்சினை நடந்தாலும் அதனை அரசுதான் செய்தது என குற்றஞ்சாட்ட கூடாது. எனது ராஜூவ்காந்தி திரைப்படம் கூட வெளியாகாமல் தான் உள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை என்பது குற்றஞ்சாட்டுவதே. மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்கிற கொள்கை குறித்து செய்தியாளர்களை சந்திக்காத கட்சி தவெக. தமிழ்நாட்டின் கடன் குறித்து பேசவில்லை. கரூரில் 41 பேரை நாங்கள் கொலை செய்யவில்லை அரசு தான் கொலை செய்தது எனவும் தனிப்பட்ட பிரச்சினைகளையும் மற்றவர்கள் செய்தார்கள் என கூறுவதும் எதற்கெடுத்தாலும் தமிழக வெற்றிக் கழகம் அரசை குற்றம் சாட்டியே வளர நினைக்கிறது. தமிழ்நாட்டில் தவெக ஒரு கொள்கை உடன் இயங்கும் கட்சியாக நான் பார்கவில்லை.

மத்திய அரசின் நிதியை எதற்காக தமிழ்நாடு அரசு பயன்படுத்துகிறது என கூறவில்லை. தமிழ்நாட்டில் வளர்ச்சிக்கான நிதியில்லை. தமிழ்நாட்டில் ஊழல் என்றால் திமுக அமைச்சர்கள் மூர்த்தி, கே.என்.நேரு மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளது. ஊழலை குறைத்தால் தமிழ்நாட்டின் கடனும் குறைந்திருக்கும். தங்கள் குடும்பத்தையே வளர்க்கிறது திமுக. மத்திய அரசின் திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தவில்லை.

ஜனநாயக கட்சி என்று கூறிக் கொள்ளும் திமுக ஒரு தாழ்த்தப்பட்ட ஒருவரை முதல்வர் ஆக்குவரா ஸ்டாலின், அவர்களது குடும்பத்தினர் தான் பதவிக்கு வருகிறார்கள். ஒரு வேலை ஸ்டாலின் முதலமைச்சர் ஆனால் அதற்கடுத்து உதயநிதி ஸ்டாலின் தான் முதல்வராக வருவார் என சொல்வாரா?

அதிமுகவையோ, பாஜகவையோ விமர்சிக்க எதுவும் இல்லாததால் திமுக அதிமுகவை அமித்ஷா திமுக என்று விமர்சிக்கிறது. பெண்களை இழிவுப்படுத்தும் அரசாக திமுக அரசு உள்ளது. பொன்முடி ஓசி பேருந்துகளில் தானே செல்கிறீர்கள் என பெண்களை பார்த்து கூறினார். கஞ்சா, மெத் உள்ளிட்ட போதை கலச்சாரம் தமிழகத்தில்தான் அதிகரித்துள்ளது. குடிப்பழக்கத்தால் தமிழகத்தில் தான் அதிக விதவைகள் உள்ளனர். கனிமொழி கூட மதுவிலக்கு என கடந்த தேர்தல்களில் வாக்குறுதி அளித்துள்ளார். தமிழ்நாட்டில் வளர்ச்சி இல்லை. டாஸ்மாக் வருமானத்தை நம்பியே தமிழ்நாடு அரசு உள்ளது.

மும்மொழி கொள்கையை தவறாக சித்தரித்து வருகிறார்கள். இந்தியை மத்திய அரசு திணிப்பதாக தவறான பிரசாரத்தை மேற்கொள்கின்றனர். இந்தியா முழுவதும் பொதுவாக பேசப்படும் மொழி இந்தி. இந்தியாவில் இந்தி மொழி ஒரு பொதுவான மொழி. இந்தி மொழியை வைத்து இந்தியா முழுவதும் பயணிக்க முடியும். சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு ஆங்கிலம் பொதுவான மொழியாக பயன்பட்டது. அதேபோன்று இந்தியாவின் பொதுமொழியாக இந்தி உள்ளது.

பொதுவான இந்தி மொழியை மக்களிடம் இந்தியை திணிக்கிறோம் என திமுக கூறி வருகிறது. மத்திய அரசு என்ன நிதி தரவில்லை என்றும் ஏற்கனவே கொடுத்த நிதியை தமிழக அரசு என்ன செய்தார்கள் என்பதை வெள்ளை அறிக்கையாக கொடுக்க முடியுமா?

தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை கொண்டுவர அதிமுகவிடம் பாஜக வலியுறுத்தும். அவ்வாறு வலியுறுத்துவதில் என்ன தவறு உள்ளது.

அதிமுக ஆட்சி வந்ததும் மும்மொழி கொள்கையை ஏற்று கொள்ள எங்களது தேசிய தலைமையை நான் வலியுறுத்துவேன். பிரதமர் மோடி தமிழ் மொழியை கற்றுக் கொள்ள முயற்சித்து வருகிறார். பாஜகவில் எனக்கான பொறுப்புகள் குறித்து ஏற்கனவே மாநில தலைவரிடம்  வலியுறுத்தினேன். சட்டமன்ற தேர்தலுக்கு பின்பு எனக்கான பொறுப்புகள் குறித்து கட்சி தலைமை அறிவிக்கும். மேலும் நான் ஆதங்கத்தில் உள்ளேன் என மாநில தலைவரிடம் கடிதம் கொடுத்து இருந்தேன் அதன் பிறகு என் ஆதரவாளர்களுக்கு பாஜகவில் பொறுப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.

சினிமாவில் இருக்கும் நல்ல கருத்துக்களை மக்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். தேவையில்லாததை விட்டு விடவும். நாளை முதல் மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் தேர்தல் பரப்பரை மேற்கொள்ள திட்டமிட்டு இருக்கிறோம்” என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் சரத்குமார் கூறியுள்ளாா்.

ஆதங்கம் என்று சொல்லியாச்சு, அதற்கு நிவர்த்தி கிடைக்கும் என்று நம்பிக்கை உள்ளது – சரத்குமார் பேட்டி

 

 

MUST READ