Homeசெய்திகள்தமிழ்நாடுநெடுஞ்சாலைத்துறை முறைகேடு வழக்கு: லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணக்குப் பின் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு அதிரடிப்...

நெடுஞ்சாலைத்துறை முறைகேடு வழக்கு: லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணக்குப் பின் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு அதிரடிப் பேட்டி!

-

- Advertisement -

தமிழக அரசியல் களத்தில் இன்று அடுத்தடுத்து அரங்கேறிய இரண்டு முக்கிய நிகழ்வுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. கடந்த திமுக ஆட்சிக் கால நெடுஞ்சாலைத்துறை முறைகேடு வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார்.

எ.வ.வேலு

we-r-hiring

மற்றொருபுறம், லஞ்சப் புகாரில் சிக்கிய தங்களது கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவரைத் தமிழக வெற்றிக் கழகத் தலைமை அதிரடியாக நீக்கியுள்ளது. இந்த இரு வேறு முக்கிய விவகாரங்களின் விரிவான நாளிதழ் செய்தித் தொகுப்பு பின்வருமாறு:

​”மடியில் கணமில்லை, வழியில் பயமில்லை!” – லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணக்குப் பின் எ.வ.வேலு பேட்டி

​கடந்த திமுக ஆட்சியில் நெடுஞ்சாலைத்துறையில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடு வழக்கு விசாரணைக்காக, முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறை (DVAC) அலுவலகத்தில் இன்று ஆஜரானார். இன்று காலை 11 மணிக்குத் தொடங்கிய இந்த விசாரணை பல மணி நேரம் நீடித்தது. விசாரணை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, எ.வ.வேலு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது: “Professional லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் கேட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் 100% உண்மையான பதில்களை வழங்கியுள்ளேன். என் மீதான குற்றச்சாட்டுகளில் எந்த உண்மையும் இல்லை.

எனக்கு மடியில் கணமில்லை, அதனால் வழியில் பயமும் இல்லை. நீதிமன்றத்தின் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது, அங்கு நீதியை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். இதில் விசாரித்த காவலர்கள் வெறும் அம்பு தான், அம்பு எய்தவர்கள் எங்கோ தூரத்தில் இருக்கிறார்கள். எனவே, முறைப்படி விசாரணை நடத்திய காவல்துறை மீது எனக்கு எந்த வருத்தமும் இல்லை.” மேலும், இந்த விசாரணை தற்போதைய தவெக அரசின் ‘பழிவாங்கும் நடவடிக்கையா?’ என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “என் மீது அவர்களுக்குப் பாசம் அதிகம், அதுதான் இது” எனத் தனது பாணியில் நையாண்டியாகப் பதிலளித்துவிட்டுச் சென்றார்.

​லஞ்சப் புகாரில் சிக்கிய தவெக நிர்வாகி கட்சியிலிருந்து கட்டம் கட்டல்!

​ஊழலுக்கு எதிரான தங்களது அரசியல் நிலைப்பாட்டில் சமரசம் இல்லை என்பதை உணர்த்தும் வகையில், ஆளும் தமிழக வெற்றிக் கழகம் இன்று அதிரடி நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளது. லஞ்சம் வாங்கிய புகாரில் சிக்கிய, செங்கல்பட்டு மாவட்டம் மாம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவரும், தமிழக வெற்றிக் கழகத்தின் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணைச் செயலாளருமான வீராசாமி, கட்சியின் அடிப்படை உறுப்பினர் தகுதி மற்றும் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் அதிரடியாக நீக்கப்படுவதாகத் தவெக தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

முன்னாள் திமுக அமைச்சர் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணையை எதிர்கொண்ட அதே நாளில், தங்களது சொந்தக் கட்சி நிர்வாகி ஒருவர் மீது எழுந்துள்ள லஞ்சப் புகாருக்கு முதலமைச்சர் ஜோசப் விஜயின் தவெக தலைமை உடனடியாக இந்த ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் உற்று நோக்கத்தக்கதாக மாறியுள்ளது.

MUST READ