Homeசெய்திகள்தமிழ்நாடுமாணிக் தாகூர் ஒன்னும் ரவீந்திரநாத் தாகூர் பேரன் இல்லை – ஆர்.எஸ். பாரதி அதிரடிப் பேட்டி!

மாணிக் தாகூர் ஒன்னும் ரவீந்திரநாத் தாகூர் பேரன் இல்லை – ஆர்.எஸ். பாரதி அதிரடிப் பேட்டி!

-

- Advertisement -

“தமிழகத்தில் தற்போது ஆட்சி எதுவும் நடைபெறவில்லை; வெறும் காட்சி மட்டும்தான் நடக்கிறது. அதனால் வரவிருக்கும் பட்ஜெட்டில் பொதுமக்கள் எதையும் எதிர்பார்க்க முடியாது” என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும், காங்கிரஸ் எம்பி மாணிக் தாகூரின் அரசியல் புரிதல் குறித்தும் அவர் எள்ளி நகையாடியுள்ளார்.மாணிக் தாகூர் ஒன்னும் ரவீந்திரநாத் தாகூர் பேரன் இல்லை – ஆர்.எஸ். பாரதி அதிரடிப் பேட்டி!

​ஆலந்தூரில் இன்று (ஜூலை 15) பெருந்தலைவர் காமராஜரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின், ஆர்.எஸ். பாரதி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் விவரம் வருமாறு,

we-r-hiring

​காமராஜரின் உண்மையான வாரிசு கலைஞர்!
​”பெருந்தலைவர் காமராஜர் உயிரோடு இருந்தபோதே சென்னை அண்ணா சாலையில் அவருக்குச் சிலை வைத்தது திமுக ஆட்சிதான். அவரது பிறந்த நாளைக் கல்வி நாளாக அரசு விழாவாகக் கொண்டாடச் சட்டம் இயற்றியவர் முத்தமிழறிஞர் கலைஞர். அதேபோல், காமராஜர் மறைந்தபோது கொட்டும் மழையில், போதிய மின்விளக்கு வசதி இல்லாத அந்த நள்ளிரவில் கார்களின் முகப்பு வெளிச்சத்தில் (Car Focus) அவரது உடலை கிண்டியில் அடக்கம் செய்தவரும் கலைஞர்தான். அதனால்தான், அன்றைய காங்கிரஸ் மூத்த நிர்வாகிகளே ‘காமராஜரின் உண்மையான அரசியல் வாரிசு கருணாநிதிதான்’ என்று நெகிழ்ந்து பாராட்டினார்கள்.

​’குதிரை பேரம்’ புகார்; நீதிமன்றத்தில் வழக்கு பாயும்!
​தற்போதைய ஆட்சியில் நடைபெறும் குதிரை பேரம் குறித்து ஆளுநரிடம் (கவர்னர்) நாங்கள் மனு அளித்துள்ளோம். அதன் மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்கிறாரோ இல்லையோ, இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் செல்லும்போது சம்பந்தப்பட்டவர்கள் நிச்சயம் பதில் சொல்லியே ஆக வேண்டும். எங்களை ஏன் கேள்வி கேட்கிறார்கள் என்று தற்போதைய அமைச்சர்கள் புலம்புகிறார்கள். சிபிஐ-யிடம் நான் எதற்காக மனு கொடுத்தேன் என்ற அடிப்படை விவரம் கூட தெரியாமல் இந்த அமைச்சர்கள் பேசி வருகின்றனர்.

​மாணிக் தாகூர் ஒன்றும் ரவீந்திரநாத் தாகூர் பேரன் அல்ல!
​அரசியலில் திடீரென மேலே வந்தவர் காங்கிரஸ் எம்பி மாணிக் தாகூர். அதனால் அவருக்கு இதெல்லாம் தெரிய வாய்ப்பில்லை. அவர் தனது பெயரில் ‘தாகூர்’ என்று இருப்பதைக் கண்டு, தன்னை கீதாஞ்சலி எழுதிய ரவீந்திரநாத் தாகூரின் பேரன் என்று நினைத்துக் கொண்டு பேசுகிறார் போல! ​திமுக ஆட்சியில் மு.க. ஸ்டாலின் முதலமைச்சராக இருந்தபோதுதான் வடசென்னையில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுப் பெரிய அளவில் வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றங்கள் உண்டானது. ஆனால், இன்றைய ‘காட்சி’ அரசியலில் எதையும் எதிர்பார்க்க முடியாது” என்று ஆர்.எஸ். பாரதி பளீச்செனத் தெரிவித்தார். ​இந்நிகழ்வின் போது திமுக பகுதிச் செயலாளர் குணாளன், முரளி உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

விளம்பர அரசியல் மட்டுமே நடக்குது.. அரசு இயந்திரம் டோட்டலா க்ளோஸ்! தவெக அரசின் ‘கையாலாகாத்தனத்தை’ சாடிய முன்னாள் அமைச்சர்!​

MUST READ