ரூ.10,000 அல்லது அதற்கு அதிகமான பணத்தை UPI மூலம் அனுப்பும் போது 1 மணி நேரம் தாமதமாக செல்லும் வகையில் மாற்றியமைக்க RBI திட்டம். அந்த 1 மணி நேரத்திற்குள் பயனர்கள் தேவைப்பட்டால் UPI transaction-ஐ திரும்ப பெறலாம். இணைய திருட்டு மற்றும் மோசடிகளை தடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
ஆன்லைன் பண மோசடிகளைத் தடுக்கவும், பயனர்களின் பாதுகாப்பை அதிகரிக்கவும் UPI சேவையில் ரிசர்வ் வங்கி (RBI) முக்கிய மாற்றங்களை முன்மொழிந்துள்ளது. ரூ. 10,000 அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை UPI மூலம் அனுப்பும் போது, அந்தப் பணம் பெறுநருக்குச் செல்ல 1 மணிநேரம் தாமதமாகும். இந்த “கூலிங்-ஆஃப்” (Cooling-off) காலத்தில், தவறுதலாகவோ அல்லது மோசடியாகவோ பணம் அனுப்பப்பட்டிருப்பதை உணர்ந்தால், அந்தப் பரிவர்த்தனையை பயனர் ரத்து செய்யலாம்.
ஏப்ரல் 1, 2026 முதல் அனைத்து டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கும் இது கட்டாயமாக்கப்பட உள்ளது. இனி UPI பின் (PIN) மட்டும் போதாது; கூடுதலாக OTP அல்லது Face ID/Biometric போன்ற ஒரு பாதுகாப்பு முறை பயன்படுத்தப்படும். ஒரு நாளைக்கு ஒரு செயலியில் அதிகபட்சமாக 50 முறை மட்டுமே பேலன்ஸ் பார்க்க முடியும். 12 மாதங்களாகப் பயன்படுத்தப்படாத UPI ஐடிக்கள் தானாகவே முடக்கப்படும்.

பெரும்பாலான பரிவர்த்தனைகளுக்கு ஒரு நாள் வரம்பு ரூ.1 லட்சமாகவே தொடர்கிறது. இந்த மாற்றங்கள் குறித்த கூடுதல் தகவல்களை RBI அதிகாரப்பூர்வ தளம் அல்லது NPCI இணையதளத்தில் சரிபார்க்கலாம்.
தமிழகத்தில் ரேஷன் முறையில் புதிய மாற்றங்கள்…. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..
