தமிழ்நாட்டில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை ரத்து செய்யக் கொரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இதன் காரணமாக அரசியல் கட்சிகள் அனல் பறக்க பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ,தமிழ்நாட்டில் தேர்தலை நிறுத்தக்கோரி மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் அவசர வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளாா்.
தமிழ்நாட்டில் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் பணம், வாஷிங் மெஷின் போன்ற இலவங்களை அறிவித்து வாக்கு கேட்பதாகவும், இது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கும், அரசியல்சாசன விதிகளுக்கும் எதரானது என்பதால் நீதிமன்றம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுதாரர் கோரிக்கை வைத்துள்ளார்.
மேலும், இந்த வழக்கில் இறுதி தீர்ப்பு பிறப்பிக்கப்படும் வரையில் தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலை நிறுத்தி வைக்கவும், இதுகுறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு பிறப்பிக்கவும் கோரப்பட்டுள்ளது
அரசியல் கட்சிகள் அனல் பறக்க பரப்புரை மேற்கொண்டு வரும் நிலையில், இவ்வாறு தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனு பரபரப்பை கிளப்பியுள்ளது.
சாதிவாரி கணப்பெடுப்பு கொள்கை சார்ந்த விவகாரம் இதில் தலையிட முடியாது – நீதிமனறம் திட்டவட்டம்
