Homeசெய்திகள்தமிழ்நாடுஊக்கத் தொகை குறித்து, நிதியமைச்சரின் கருத்துக்கு விவசாயிகள் கடும் கண்டனம்

ஊக்கத் தொகை குறித்து, நிதியமைச்சரின் கருத்துக்கு விவசாயிகள் கடும் கண்டனம்

-

- Advertisement -

தமிழக அரசு விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யும் போது,   விவசாயிகளை ஊக்கப்படுத்திட வழங்கிவரும்  ஊக்கத் தொகையை வழங்க வேண்டாம் நிறுத்திவிடுங்கள் என்று  ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழக அரசுக்கு தெரிவித்ததற்கு தஞ்சை விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனா்.ஊக்கத் தொகை குறித்து, நிதியமைச்சரின் கருத்துக்கு விவசாயிகள் கடும் கண்டனம்இதுகுறித்து தஞ்சை மாவட்ட விவசாய சங்க பிரதிநிதி ஜீவக்குமார், “தமிழகத்தில் பருப்பு உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்வது குறைவு நெல் உற்பத்தியில் தான் லட்சக்கணக்கான விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளை நெல் உற்பத்தியை கைவிடாமல் தொடர்ந்து செய்திட வேண்டும் என்பதற்க்காக விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கிவரும் நிலையில், “ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நெல் உற்பத்தியை குறைக்கும் வகையில் தமிழக அரசு ஊக்கத்தொகை வழங்க வேண்டாம் என்று கூறியுள்ளதற்கு தஞ்சை விவசாயிகள் சாா்பாக கடும் கண்டனம் தெரிவித்து கொள்கிறோம்” என தஞ்சை மாவட்ட விவசாய சங்க பிரதிநிதி ஜீவக்குமார் பேட்டியளித்துள்ளாா்.

மேலும், ஊக்கத்தொகை வழங்கி விவசாயிகளை பாதுகாத்திடும் முதல்வருக்கு நன்றிகளையும், பாராட்டுகளையும் விவசாயிகள் சாா்பாக தெரிவித்துக்கொள்கிறோம் என்றும் ஜீவக்குமார் கூறினாா்.

வருமானத்தை மறைத்த விவகாரம்: விஜய் ஐகோர்ட்டில் மேல்முறையீடு….

we-r-hiring

MUST READ