“‘சீதா ராமம்’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறதா?” என்ற கேள்விக்கு நடிகை மிருனாள் தாகூர் பதில் அளித்துள்ளார்.
தெலுங்கில் துல்கர் சல்மான் மற்றும் மிருனாள் தாகூர் நடிப்பில் வெளியான ‘சீதா ராமம்‘ திரைப்படம் பான் இந்தியா அளவில் மெஹா ஹிட் ஆனது. ராஷ்மிகா மந்தனாவும் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தக் காவியக் காதல் கதை அனைவரது மனங்களையும் வென்றது.

நடிகை மிருனாள் தாகூர் சீதா மகாலட்சுமியாகவும் இளவரசி நூர்ஜஹான் ஆகவும் ஒரே நேரத்தில் வந்து ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டார்.
இந்நிலையில் ‘சீதா ராமம்‘ படத்தின் இரண்டாம் பாகம் குறித்த கேள்விக்கு மிருணாள் தாகூர் பதில் அளித்துள்ளார். ட்விட்டரில் ‘சீதா ராமம்’ படத்தின் அடுத்த பாகம் உருவாகுமா? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், “எனக்கு அது குறித்த ஐடியா இல்லை. இரண்டாம் பாகம் உருவானால், அதில் நானும் இருக்க வேண்டும் என விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
படத்தின் இரண்டாம் பாகம் வேண்டும் என்று நாங்களும் விரும்புகிறோம் இளவரசியே!