சமந்தாவுடன் இணைந்து நடிக்க ஆவலாக காத்திருப்பதாக நடிகை மிருனாள் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகை மிருனாள் தாக்கூர் ‘சீதாராமம்’ படம் முழுவதாக மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். சீதா மகாலட்சுமியாகவும் இளவரசி நூர்ஜஹான் ஆகவும் ஒரே நேரத்தில் வந்து ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டார்.

அந்தப் படத்தை எடுத்து அவருக்கு தென்னிந்திய சினிமாவில் பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் மிருனாள் தாக்கூர் சமந்தாவுடன் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.
சமந்தா நடிப்பில் வெளியாக இருக்கும் சாகுந்தலம் படத்திற்கு வாழ்த்து தெரிவித்த மிருனாள் தாக்கூர் அவர் “நீங்கள் என்னை மிகவும் இன்ஸ்பயர் செய்கிறீர்கள். சாம் உங்களுக்கு எனது கேள்வி என்னவென்றால் நாம் இருவரும் எப்போது சேர்ந்து நடிக்கப் போகிறோம்” என்று கேட்டுள்ளார்.
அதற்கு “கண்டிப்பாக பண்ணலாம். நான் இந்த ஐடியாவை மிகவும் விரும்புகிறேன்” என்று சமந்தா பதிலளித்துள்ளார். இருவரும் மாறி மாறி பதிலளித்துக் கொள்வது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.