spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இனிமே தான் ஆட்டம் ஆரம்பம்... சமந்தா கதையை தட்டி தூக்கிய ரஷ்மிகா!

இனிமே தான் ஆட்டம் ஆரம்பம்… சமந்தா கதையை தட்டி தூக்கிய ரஷ்மிகா!

-

- Advertisement -

ரஷ்மிகா மந்தான்னா நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

நடிகை ரஷ்மிகா மந்தான்னா தற்போது இந்திய அளவில் ட்ரெண்டிங் நடிகையாக மாறியுள்ளார். கன்னடத்தில் தொடங்கிய சினிமா பயணத்தை தெலுங்கு சினிமாவில் பிரகாசமாக ஜொலிக்க வைத்தார். பின்னர் தமிழ் பக்கம் தலை காட்டினார். அதையடுத்து பாலிவுட்டில் சீறிப் பாய்ந்து பான் இந்தியா நடிகையாக மாறியுள்ளார்.

we-r-hiring
Rainbow
Rainbow

முன்னணி நடிகை ஆகிவிட்டால் அடுத்து என்ன, கதாநாயகியை மையமாக கொண்ட படத்தில் நடிப்பது தான் ஐதீகம். தற்போது அது நடக்கப்போகிறது.

ஆம், ரஷ்மிகா கதாநாயகியாக நடிக்க இருக்கும் புதிய படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. படத்திற்கு ‘ரெயின்போ’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் சாந்த்ரூபன் இயக்க உள்ளார். இவர் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர்.

இந்தப் படத்தை தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபுவின் ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாக இருக்கிறது.

samantha-and-rashmika.jpg
samantha-and-rashmika

இந்தக் கதையில் முதலில் சமந்தா நடிப்பதாக இருந்தது. ஆனால் தற்போது ரஷ்மிகா இந்தப் படத்தில் இணைந்துள்ளார்.

MUST READ