Homeசெய்திகள்சென்னைமுதல்முறையாக ரூ.78,000-த்தை நெறுங்கும் தங்க விலை – நடுத்தர குடும்பங்கள் அதிர்ச்சி

முதல்முறையாக ரூ.78,000-த்தை நெறுங்கும் தங்க விலை – நடுத்தர குடும்பங்கள் அதிர்ச்சி

-

- Advertisement -

(செப்டம்பர்-02) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை  நிலவரம்.முதல்முறையாக ரூ.78,000-த்தை நெறுங்கும் தங்க விலை – நடுத்தர குடும்பங்கள் அதிர்ச்சிசென்னையில் ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளி விலை வரலாறு காணாத அளவிற்கு புதிய உச்சத்தை எட்டியுள்ளது, தங்கம் கிராமிற்கு ரூ.20 உயர்ந்து 1 கிராம் தங்கம் ரூ.9,725-க்கும், சவரனுக்கு ரூ.160 உயர்ந்து 1 சவரன் தங்கம் ரூ.77,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கடந்த மாதத்தில் (ஆகஸ்ட்) மட்டும் சவரனுக்கு ரூ.3,760 அதிகரித்துள்ள நிலையில், இம்மாதத்தின் முதல் நாளே பேரும் விலை உயர்வுடன் தொடங்கியுள்ளதால் நடுத்தர குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  அதேபோல்,சில்லறை வணிகத்தில் வெள்ளி விலை கிராம் ரூ.1  உயர்ந்து 1 கிராம் வெள்ளி ரூ.137-க்கும், 1 கிலோ வெள்ளி ரூ.1,37,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் ரூ.78,000 நெருங்கியது இதுவே முதல்முறை.

அதிமுக கூட்டணியில்  என்ன நடக்கிறது? அதிர்ச்சி தகவல்களை உடைத்த மணி!

MUST READ