spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைஅதிமுக கூட்டணியில்  என்ன நடக்கிறது? அதிர்ச்சி தகவல்களை உடைத்த மணி!

அதிமுக கூட்டணியில்  என்ன நடக்கிறது? அதிர்ச்சி தகவல்களை உடைத்த மணி!

-

- Advertisement -

என்டிஏ கூட்டணியில் இடம்பெற்றிருந்த தினகரன், பிரேமலதா போன்றவர்கள் வெளியேறுவது அதிமுகவை பலவீனப்படுத்தும் என்று மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.

we-r-hiring

என்டிஏ கூட்டணியில் தினகரன் புறக்கணிக்கப்படுவது, எடப்பாடிக்கு எதிரான பிரேமலதாவின் அறிக்கை உள்ளிட்ட அதிமுக கூட்டணியில் ஏற்பட்டிருக்கும் பின்னடைவுகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் மணி யூடியுப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலிலில் தெரிவித்துள்ளதாவது:- அதிமுக – பாஜக கூட்டணி தமிழ்நாட்டில் தற்போது தான் மெல்ல மெல்ல ஜெல் ஆக தொடங்கியுள்ளது. எடப்பாடி தான் முதலமைச்சர் வேட்பாளர் என்று அண்ணாமலை இரு முறைக்கு மேல் சொல்லிவிட்டார். கூட்டணியின் வெற்றியை பாதிக்கும் என்பதால் அண்ணாமலை அப்படி சொல்ல வைக்கப்பட்டிருக்கிறார். நயினார், எடப்பாடி தான் முதலமைச்சர் என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டு வருகிறார். பாமக, தேமுதிக, டிடிவி தினகரன் என யாரும் கூட்டணிக்கு வரவில்லை. இந்த நிலையில், தான் பிரேமலதாவும், அவரது தம்பி சுதீஷும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்று பார்த்தார்கள். மு.க.முத்துவின் மறைவை ஒட்டி சென்றாத சொன்னாலும், அது கூட்டணிக்கான முன்னேற்பாடுதான். ஆக. 30ஆம் தேதி மூப்பனார் நினைவு தினத்தன்று அதிமுக – பாஜக கூட்டணி தலைவர்களுடன் சுதீஷ் மேடையில் இருக்கிறார். அதேநாளில் பிரேமலதா வெளியிட்ட அறிக்கையில் எடப்பாடி பழனிசாமி முதுகில் குத்திவிட்டார் என்று சொல்கிறார். ஒரே நேரத்தில் இரு தரப்பிலும் பேசுவது. பேரம் எங்கு அதிகமாக படிகிறதோ, அங்கு போய் சேர்வது அவருடைய வழக்கம்.

டிடிவி தினகரன் திடீரென தாங்கள் கூட்டணியில் இருக்கிறோமா? இல்லையா? என்று வரும் டிசம்பர் மாதத்தில் தான் சொல்வோம் என்கிறார். தினகரனால், அதிமுக – பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுவது அவ்வளவு சாத்தியம் இல்லை. அவருக்கு சில நிர்பந்தங்கள் இருக்கின்றன. எனவே அவர் கூட்டணியில் தொடருவார் என்றுதான் நினைக்கிறேன். ஓபிஎஸ் கதை இன்னும் மோசமாகி கொண்டிருக்கிறது. மாநாட்டையே அவர் ஒத்திவைத்து விட்டார். பாமகவில் தந்தை – மகன் இடையிலான மோதல் புதிய உச்சத்தை தொட்டிருக்கிறது. 2019ல் என்டிஏ கூட்டணி வலிமையாக இருந்தது. அவர்கள் 2019 சட்டமன்றத் தேர்தலில் 75 இடங்களை வென்றது. எனவே ஒன்றுபட்ட அதிமுக, என்டிஏ கூட்டணி இருந்தால் 2026 தேர்தலில் விஜய் பேக்டர் இருந்தாலும் கடும் போட்டியை கொடுத்திருக்கும்.

ஒன்றுபட்ட திமுக எல்லா காலங்களிலும் திமுகவுக்கு சிம்ம சொப்பனமாக தான் இருந்துள்ளது. இன்றைய தேவை என்பது ஒன்றுபட்ட அதிமுக தான். இவர்கள் ஒன்றுபடாவிட்டால் திமுகவை வீழ்த்தவே முடியாது. எடப்பாடி இறங்கிவராவிட்டால் பாதிப்பு அதிமுகவுக்கும் பெரிய அளவில் ஏற்பட போகிறது. விஜய் பேக்டர் வந்த உடன் 4 ஆக வாக்குகள் பிரிய போகிறது. இது திமுகவுக்குதான் சாதகம். டிடிவி தினகரன், தனக்கு என்டிஏ கூட்டணிக்கு அழைப்பே விடுக்கவில்லை என்று சொல்கிறார். பாஜகவுக்கு தன்னை புறக்கணிக்க வேண்டிய அவசியம் என்ன உள்ளது என்று அவர் கேட்கிறார்.

ஒருவேளை டிடிவி தினகரனையும் வெளியேற்றிவிட்டு, அதிமுகவை பலவீனப்படுத்துவது அவர்களின் நோக்கமாக இருக்கலாம். திமுக ஆட்சிக்கு வந்தால் வரட்டும். அதிமுக என்கிற ஒரு திராவிட கட்சியை அழித்து விடுவோம் என்கிற ஒரு தியரி உள்ளது. அதை நாம் முழுமையாக ஏற்க முடியாது. இந்த நடவடிக்கையில் அதிமுக பலவீனப்படுவதை அவர்கள் ரசிப்பார்கள். பலவீனப்படுத்தவும் அவர்கள் செய்வார்கள். ஆனால் வெற்றியை தூக்கி திமுகவுக்கு கொடுக்க மாட்டார்கள்.

விஜய், திமுக – அதிமுக என இரு கட்சிகளில் இருந்தும் வாக்குகளை பிரிக்கிறார். திமுக கூட்டணி கட்சிகளின் வாக்குகளையும் அவர் பிரிப்பார். எனவே திமுக கூட்டணிக்கு கடந்த முறை கிடைத்த வாக்குகள் கிடைக்காது. அதிமுக – பாஜக கூட்டணி கட்சிகள் சிதறுவது நிச்சயமாக அதிமுகவுக்குதான் பாதிப்புதான். பாஜக, டிடிவி தினகரன் போன்ற ஒரு சிறிய கட்சியை காத்திருக்க வைப்பது ஏன்? திமுக அதிகாரத்தில் இருக்கிறபோது, அதிமுக ஒன்றுபட்டு இரட்டை இலை சின்னத்தோடு இருந்தால்தான் களத்தில் நிற்க முடியும். அது இல்லாவிட்டால் அவர்களால் திமுகவை வீழ்த்த முடியாது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ