Homeசெய்திகள்சினிமாதனுஷ் ரசிகர்களே தயாரா?... ஆடியோ லான்ச் அப்டேட் கொடுத்த 'இட்லி கடை' படக்குழு!

தனுஷ் ரசிகர்களே தயாரா?… ஆடியோ லான்ச் அப்டேட் கொடுத்த ‘இட்லி கடை’ படக்குழு!

-

- Advertisement -

இட்லி கடை படத்தின் ஆடியோ லான்ச் அப்டேட் வெளியாகி உள்ளது.தனுஷ் ரசிகர்களே தயாரா?... ஆடியோ லான்ச் அப்டேட் கொடுத்த 'இட்லி கடை' படக்குழு!

தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகராக வலம் வரும் நடிகர் தனுஷ் தற்போது விக்னேஷ் ராஜா இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இதற்கிடையில் இவர், ‘இட்லி கடை’ எனும் திரைப்படத்தை தானே இயக்கி, நடித்திருக்கிறார். இந்த படத்தில் தனுஷ் உடன் இணைந்து அருண் விஜய், நித்யா மேனன், ராஜ்கிரண், சத்யராஜ், பார்த்திபன், ஷாலினி பாண்டே ஆகியோர் நடித்துள்ளனர். டான் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க ஜி.வி. பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். தனுஷ் ரசிகர்களே தயாரா?... ஆடியோ லான்ச் அப்டேட் கொடுத்த 'இட்லி கடை' படக்குழு!கிரண் கௌசிக் இதன் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். தனுஷின் 52 வது படமான இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருக்கும் நிலையில் படமானது வருகின்ற அக்டோபர் 1ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த பாடல்களும், போஸ்டர்களும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

we-r-hiring

இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வருகின்ற செப்டம்பர் 14ஆம் தேதி நேரு அரங்கத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர். ‘குபேரா’ படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு பிறகு தனுஷின் பேச்சைக் கேட்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ