Homeசெய்திகள்சினிமாரியோ ராஜ் நடித்துள்ள 'ஆண்பாவம் பொல்லாதது'.... முக்கிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

ரியோ ராஜ் நடித்துள்ள ‘ஆண்பாவம் பொல்லாதது’…. முக்கிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

-

- Advertisement -

ரியோ ராஜ் நடித்துள்ள ஆண்பாவம் பொல்லாதது படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.ரியோ ராஜ் நடித்துள்ள 'ஆண்பாவம் பொல்லாதது'.... முக்கிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

சின்னத்திரை நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ரியோ ராஜ். இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தின் மூலம் வெள்ளித்திரையில் ஹீரோவாக அறிமுகமானார். இருப்பினும் ‘ஜோ’ திரைப்படம் தான் இவருக்கு நல்ல பெயரையும், புகழையும் பெற்றுத் தந்தது. இந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு ரியோ ராஜுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது. அதன்படி ‘ஸ்வீட் ஹார்ட்’ எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ரியோ ராஜ் நடித்துள்ள 'ஆண்பாவம் பொல்லாதது'.... முக்கிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!அடுத்தது இவர், ‘ஆண்பாவம் பொல்லாதது’ எனும் திரைப்படத்திலும் நடித்துள்ளார். இப்படத்தில் ரியோ ராஜுக்கு ஜோடியாக மாளவிகா மனோஜ் நடித்திருக்கிறார். ஏற்கனவே இந்த கூட்டணி ‘ஜோ’ திரைப்படத்தில் இணைந்திருந்த நிலையில் ஆண்பாவம் பொல்லாதது படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. ட்ரம்ஸ்டிக்ஸ் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க கலையரசன் தங்கவேல் இதனை இயக்கியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்த நிலையில் படத்திலிருந்து அடுத்தடுத்த பாடல்களும், போஸ்டர்களும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. ரியோ ராஜ் நடித்துள்ள 'ஆண்பாவம் பொல்லாதது'.... முக்கிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!இந்நிலையில் இந்த படமானது வருகின்ற அக்டோபர் 31ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி இந்த படத்தின் புதிய போஸ்டர் ரசிகர்களின் கவனம் ஈர்த்துள்ளது. மேலும் இந்த போஸ்டரை பார்க்கும்போது திருமணத்திற்கு பிறகு ஒரு ஆண் என்னென்ன கொடுமைகளை அனுபவிக்கின்றான் என்பதை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டு இருப்பது போல் தெரிகிறது. இனிவரும் நாட்களில் மற்ற தகவல்கள் வெளியாகும் என நம்பப்படுகிறது.

MUST READ