த்ரிஷ்யம் 3 படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.
கடந்த 2013ஆம் ஆண்டு மோகன்லால் நடிப்பில் ‘த்ரிஷ்யம்’ திரைப்படம் வெளியானது. விறுவிறுப்பான திரைக்கதையில் வெளியான இந்த படத்தை ஜீத்து ஜோசப் இயக்கியிருந்தார். மீனா, அன்சிபா ஹாசன், எஸ்தர், ஆஷா சரத் மற்றும் பலர் நடித்திருந்தனர். குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து வெளியான ‘த்ரிஷ்யம் 2’ திரைப்படமும் ரசிகர்களுக்கு தரமான விருந்து படைத்தது. இதற்கிடையில் இந்த படம் தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. தமிழில் ரீமேக் செய்யப்பட்ட இந்த படத்தில் கமல்ஹாசன், கௌதமி ஆகியோர் நடித்திருந்தனர். அனைத்து மொழிகளிலும் ரசிகர்களின் பேராதரவை பெற்ற இந்த படத்தின் அடுத்த பாகம் எப்போது உருவாகும் என பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர். அந்த வகையில் த்ரிஷ்யம் 3 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படம் தொடர்பான அறிவிப்பை ஏற்கனவே மோகன்லால் வெளியிட்டிருந்த நிலையில் தற்போது இது தொடர்பான லேட்டஸ்ட் தகவல் ஒன்று கிடைத்திருக்கிறது.
Bringing Georgekutty’s world alive once again…
Today marks the beginning of Drishyam 3 with the Pooja.#Drishyam3 #JeethuJoseph #AashirvadCinemas #Drishyam pic.twitter.com/olQYQZR1WF— Mohanlal (@Mohanlal) September 22, 2025

அதாவது இன்று (செப்டம்பர் 22) இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டிருப்பதாக மோகன்லால் தனது எக்ஸ் தள பக்கத்தில், “ஜார்ஜ் குட்டியின் உலகத்தை மீண்டும் உயிர்பிக்கிறோம். த்ரிஷ்யம் 3 இன்று பூஜையுடன் தொடங்குகிறது” என்று குறிப்பிட்டு பூஜை தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்து அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். இந்த தகவல் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை தந்துள்ளது.