spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாமுக்கியமான மலையாள நடிகர்களின் வீடுகளில் அதிரடி ரெய்டு!

முக்கியமான மலையாள நடிகர்களின் வீடுகளில் அதிரடி ரெய்டு!

-

- Advertisement -

முக்கியமான மலையாள நடிகர்களின் வீடுகளில் அதிரடி ரெய்டு நடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.முக்கியமான மலையாள நடிகர்களின் வீடுகளில் அதிரடி ரெய்டு!

பூடானிலிருந்து இந்தியாவிற்கு போலி பதிவுகளின் மூலம் சொகுசு வாகனங்கள் இறக்குமதி செய்யப்படுவதாகவும், வரியை தவிர்ப்பதற்காக அதை பழைய வாகனங்களாக பதிவு செய்து மோசடி நடப்பதாகவும் சுங்கத்துறை அதிகாரிகள் கண்டறிந்து இருக்கின்றனர். இந்த மோசடி வழக்கு தொடர்பாக ஐந்து மாவட்டங்களில் கிட்டத்தட்ட 30 இடங்களில் சுங்கத்துறை சோதனை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. அதன்படி முதற்கட்ட விசாரணையில் வாடிக்கையாளர் பட்டியல் கண்டறியப்பட்டிருக்கிறது. அதில் மலையாள திரைப்பட நடிகர்கள் மற்றும் மற்ற பணக்காரர்களின் பெயர்களும் இருப்பதாக சொல்லப்படுகிறது. எனவே இந்த வழக்கு தொடர்பாக சுங்கத்துறை அதிகாரிகள் மலையாள சினிமாவின் முக்கியமான நடிகர்களான பிரித்விராஜ் சுகுமாரன் மற்றும் துல்கர் சல்மான் வீடுகளில் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.முக்கியமான மலையாள நடிகர்களின் வீடுகளில் அதிரடி ரெய்டு!

we-r-hiring

துல்கர் சல்மான் தயாரிப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான ‘லோகா’ திரைப்படம் வெளியானது. கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் சூப்பர் ஹீரோ படமாக வெளியான இப்படம் இந்திய அளவில் ரசிகர்களை கவர்ந்து உலக அளவில் ரூ.250 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து மிகப் பெரிய சாதனை படைத்துள்ளது. அதுமட்டுமில்லாமல் இப்படம், பிரித்விராஜ் சுகுமாரன் இயக்கியிருந்த ‘எம்புரான்’ படத்தின் வசூலையும் முறியடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ