spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'கருப்பு' படத்தில் இரண்டு ஹீரோவா?.... திரிஷாவின் கேரக்டர் என்ன?.... லேட்டஸ்ட் அப்டேட்!

‘கருப்பு’ படத்தில் இரண்டு ஹீரோவா?…. திரிஷாவின் கேரக்டர் என்ன?…. லேட்டஸ்ட் அப்டேட்!

-

- Advertisement -

கருப்பு படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.'கருப்பு' படத்தில் இரண்டு ஹீரோவா?.... திரிஷாவின் கேரக்டர் என்ன?.... லேட்டஸ்ட் அப்டேட்!

சூர்யாவின் 45வது படமாக உருவாகி வரும் திரைப்படம் தான் ‘கருப்பு’. இந்த படத்தை ஆர்ஜே பாலாஜி இயக்க ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சாய் அபியங்கர் இதற்கு இசை அமைக்கிறார். ஜி.கே. விஷ்ணு இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். இதில் திரிஷா, நட்டி நடராஜ், யோகி பாபு, சுவாசிகா, ஷிவதா மற்றும் பலர் நடிக்கின்றனர். சூர்யாவிற்கு கங்குவா, ரெட்ரோ ஆகிய படங்கள் பெரிய அளவில் கை கொடுக்கவில்லை என்பதால் ரசிகர்கள் பலரும் அடுத்ததாக கருப்பு திரைப்படத்தை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர்.'கருப்பு' படத்தில் இரண்டு ஹீரோவா?.... திரிஷாவின் கேரக்டர் என்ன?.... லேட்டஸ்ட் அப்டேட்! அதன்படி இந்த படமானது அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு 14ஆம் தேதி திரைக்கு வரும் என பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஒட்டுமொத்தமாக நிறைவடையவில்லை எனவும், இன்னும் கிட்டத்தட்ட 13 நாட்கள் பேட்ச் ஒர்க் வேலைகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இது தவிர ஏற்கனவே வெளியான தகவலின் படி நடிகர் சூர்யா இந்த படத்தில் வழக்கறிஞராக நடிக்கிறார். மேலும் தெய்வீக தன்மை கொண்ட மனிதராக நடிக்கிறார் என புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. 'கருப்பு' படத்தில் இரண்டு ஹீரோவா?.... திரிஷாவின் கேரக்டர் என்ன?.... லேட்டஸ்ட் அப்டேட்!ஆர்ஜே பாலாஜி இந்த படத்தில் மற்றொரு வழக்கறிஞராக, இன்னொரு ஹீரோவாக நடிக்கிறார் என்றும் திரிஷா இந்த படத்தில் மிகவும் முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார் எனவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது போன்ற தகவல்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேன்மேலும் அதிகமாக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ