“ஏ சினிமாக்கார பயலே இது தமிழ்நாடுடா, வாழ ஆசைப்படு தப்பில்லை ஆனால் ஆள நினைக்கிறியே தப்பு இல்ல” – நட்டி நடராஜன் நடிப்பில் உருவாகியுள்ள TN 2026 படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
உமாபதி ராமையா இயக்கத்தில் நட்டி நடராஜன், தம்பி ராமையா, எம்எஸ் பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் “TN 2026” என்ற திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தை தமிழ் திரையுலகில் தரமான பல வெற்றிப் படங்களை தொடர்ந்து வழங்கி வருகின்ற ”KRG Kannan Ravi Group” சார்பில் கண்ணன் ரவி மற்றும் தீபக் ரவி இப்படத்தை தயாரித்துள்ளனர். அரசியல் பகடி கலந்து, சமூக அக்கறை மிக்க கருத்துக்களுடன் அனைவரும் ரசிக்கும் கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகியுள்ளது. அரசியல் கதைகளத்தில் உருவாக்கியுள்ள இப்படம் வருகின்ற ஏப்ரல் பத்தாம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

சினிமா நடிகர் ஒருவர் அரசியலுக்கு வருவது போன்று எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் நட்டி கதாபாத்திரத்தை விஜயை போன்றும் தம்பி ராமையா கதாபாத்திரத்தை தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த போன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வெளியாகியுள்ள இந்த டீசரில் “ஏ சினிமாக்கார பயலே இது தமிழ்நாடுடா, வாழ ஆசைப்படு தப்பில்லை ஆனால் ஆள நினைக்கிறியே தப்பு இல்ல” என்ற வசனம் இடம் பெற்றுள்ளது. இது தற்பொழுது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில், வருகின்ற ஏப்ரல் 10 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
மம்மூட்டி, மோகன்லால் இணையும் ‘பேட்ரியாட்’ ட்ரெய்லர் ஏப்ரல் 4 வெளியீடு…
