Homeசெய்திகள்சினிமாஇரண்டு குழந்தைகளுக்கு தாயான திரிஷா…சினிமாவிலிருந்து விலகப் போவதாக தகவல்…

இரண்டு குழந்தைகளுக்கு தாயான திரிஷா…சினிமாவிலிருந்து விலகப் போவதாக தகவல்…

-

- Advertisement -

நடிகை திரிஷா, விரைவில் திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக தகவல்கள் வந்தன. இதனால் அவரது ரசிகர்கள் பொிதும் சோகத்தில் மூழ்கினா்.இரண்டு குழந்தைகளுக்கு தாயான திரிஷா…சினிமாவிலிருந்து விலகப் போவதாக தகவல்…நடிகை திரிஷா சினிமாவுக்கு முழுக்கு போடப்போவதாகவும், விரைவில் திருமணம் செய்துக் கொள்ளப் போவதாகவும் தொடர்ந்து தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் பொிதும் சோகத்தில் மூழ்கினா்.

இது தொடர்பாக , சில தயாரிப்பாளர்களுக்கு அவர் கால்ஷீட் கொடுக்க மறுத்தும் படங்களில் நடிக்க விருப்பமில்லை என்று கூறியும் அவர்களை திருப்பி அனுப்பியிருக்கிறார். இப்படி சில நாட்களாக தொடர்ந்து தகவல்கள் வந்துகொண்டிருந்தாலும் திரிஷா எதுவும் சொல்லாமல் அமைதியே காத்துவந்தார். அவரது அமைதியை காத்து வருவதால் அவரது ரசிகர்களோ, இது உண்மைதான் போல. அதனால்தான் அவர் அமைதியாக இருக்கிறார் என்றும் கமெண்ட்ஸ் செய்ய தொடங்கிவிட்டார்கள்.

we-r-hiring

மேலும் 20 வருட திரை பயணம் முடிவுக்கு வருகிறது என எமோஷனலாகவும் போஸ்ட் போட்டிருந்தார்கள். இந்நிலையில் இதுகுறித்து பேசியிருக்கிறார் திரிஷா. அவர் இந்த விஷயம் தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘‘நான் சினிமாவை விட்டு விலகிவிட்டேனாம். ஒரு பணக்கார தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டேனாம். நேற்றிலிருந்து இரண்டு குழந்தைகளையும் நான் வளர்த்துக்கொண்டு இருக்கிறேனாம். இன்னும் ஏதாவது சேர்க்க வேண்டுமா இல்லை இன்றைக்கான கற்பனை கதை கோட்டா முடிந்துவிட்டதா?’’ என்று கோபமாக கேள்வி எழுப்பியிருக்கிறார்.

திரிஷா சினிமாவிலிருந்து விலகப் போவதாகத்தான் தகவல் வந்தது. அவருக்கு திருமணம், குழந்தைகள் இருக்கிறது என்றெல்லாம் யாருமே சொல்லவில்லையே. அவராக இப்படி சொல்வது ஏன்?’’ என சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

விஜயுடன் திரிஷா பற்றி விமர்சனம் செய்த நயினாரின் பேச்சுக்கு குவியும் கண்டனங்கள்!!

MUST READ