வித்தியாசமான குரலாலும், தனித்துவமான நடிப்பாலும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ள நடிகர் அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு ‘சூப்பர் ஹீரோ’ எனத் தலைப்பு வைக்கப்பட்டு, அதன் அதிரடியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.
அறிமுக இயக்குனர் விக்னேஷ் வேணுகோபால் இப்படத்தை இயக்குகிறார். அர்ஜுன் தாஸிற்கு ஜோடியாக தேஜு அஸ்வினி கதாநாயகியாக நடிக்கிறார். பிரபல நடன இயக்குனர் சாண்டி மாஸ்டர் இத்திரைப்படத்தில் வில்லனாக மிரட்டலான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவின் ‘குஷி’ மற்றும் மலையாளத்தில் பிரணவ் மோகன்லால் நடித்த ‘ஹிருதயம்’ போன்ற பிளாக்பஸ்டர் திரைப்படங்களின் மூலம் தென்னிந்தியா முழுவதும் பிரபலமான இசையமைப்பாளர் ஹிஷாம் அப்துல் வஹாப் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ‘சூப்பர் ஹீரோ’ என்ற மாஸான தலைப்புடனும், வித்தியாசமான கூட்டணியுடனும் உருவாகியிருக்கும் இந்தத் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், சமூக வலைத்தளங்களில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகும் புதிய படம்: ‘சூப்பர் ஹீரோ’ தலைப்புடன் வெளியானது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!
-
- Advertisement -
