Homeசெய்திகள்சினிமாதயாரிப்பாளராக அவதாரமெடுத்த பிரதீப் ரங்கநாதன்! மமீதா பைஜு நடிப்பில் மிரட்டலாக வெளியான #PRS01 அறிமுக வீடியோ

தயாரிப்பாளராக அவதாரமெடுத்த பிரதீப் ரங்கநாதன்! மமீதா பைஜு நடிப்பில் மிரட்டலாக வெளியான #PRS01 அறிமுக வீடியோ

-

- Advertisement -

‘கோமாளி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி, ‘லவ் டுடே’ படம் மூலம் நடிகராகவும் தமிழ் சினிமாவில் ஹாட்ரிக் பிளாக் பஸ்டர் வெற்றிகளைக் குவித்தவர் பிரதீப் ரங்கநாதன். தமிழ் சினிமாவின் தற்போதைய ட்ரெண்ட் செட்டராக வலம் வரும் இவர், இப்போது முதன்முறையாக தயாரிப்பாளராக புதிய அவதாரம் எடுத்துள்ளார்.

பிரதீப் ரங்கநாதன்

we-r-hiring

பிரதீப் ரங்கநாதனின் ‘பி ஆர் ஷோ’ (PR Show) நிறுவனம் தயாரிப்பில், மமீதா பைஜு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் #PRS01 திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிமுக வீடியோ (Intro Video) இன்று வெளியிடப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது.

6 இயக்குநர்கள்… ஒரு கூட்டணி! ‘தி ஆல்ஃபா யூனிட்’
இப்படத்தின் மிக முக்கியமான சிறப்பம்சமே இதன் இயக்கம் தான். பிரதீப் ரங்கநாதனிடம் உதவி இயக்குநர்களாகப் பணியாற்றிய விஷால், யஷ், நவீன், சாணக்யன், தனுஷ், இளம்பரிதி ஆகிய 6 பேர் ஒன்றிணைந்து ‘தி ஆல்ஃபா யூனிட்’ (The Alpha Unit) என்ற பெயரில் இப்படத்தின் மூலம் இயக்குநர்களாக அறிமுகமாகிறார்கள். படத்தின் கதையை பிரதீப் ரங்கநாதனே எழுதியுள்ளார்.

நட்சத்திரப் பட்டாளம் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள்:
கதையின் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இத்திரைப்படத்தில் அஸ்வத் மாரிமுத்து, சுவாசிகா, சிவாஜி சொன்டினேனி, அனாமிகா மகி, லிசி ஆண்டனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இசை: ‘அடிடா அவள’ புகழ் சாய் அபயங்கர்

ஒளிப்பதிவு: தினேஷ்குமார் புருஷோத்தமன்

படத்தொகுப்பு (Editing): பிரதீப் ராகவ்

3 மொழிகளில் பிரம்மாண்ட ரிலீஸ்:
தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகி வரும் இந்தத் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு இப்போதே கோலிவுட்டில் எகிறியுள்ளது.

MUST READ