spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாதீபாவளி ரேஸில் இருந்து விலகிய 'எல்ஐகே'.... அடுத்த பண்டிகையை டார்கெட் செய்யும் படக்குழு!

தீபாவளி ரேஸில் இருந்து விலகிய ‘எல்ஐகே’…. அடுத்த பண்டிகையை டார்கெட் செய்யும் படக்குழு!

-

- Advertisement -

எல்ஐகே படத்தின் ரிலீஸ் குறித்த புதிய அப்டேட் வெளியாகி உள்ளது.தீபாவளி ரேஸில் இருந்து விலகிய 'எல்ஐகே'.... அடுத்த பண்டிகையை டார்கெட் செய்யும் படக்குழு!

தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி தற்போது ஹீரோவாக ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்திருப்பவர் பிரதீப் ரங்கநாதன். இவருடைய நடிப்பில் கடைசியாக வெளியான ‘டிராகன்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றது. எனவே இவருடைய அடுத்தடுத்த படங்களின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாக இருந்து வருகிறது. அந்த வகையில் இவரது நடிப்பில் உருவாகி இருக்கும் ‘டியூட்’ திரைப்படம் 2025 அக்டோபர் 17ஆம் தேதி தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படம் தொடர்பான ஒவ்வொரு அப்டேட்டுகளும் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.விதீபாவளி ரேஸில் இருந்து விலகிய 'எல்ஐகே'.... அடுத்த பண்டிகையை டார்கெட் செய்யும் படக்குழு! இதற்கிடையில் பிரதீப் ரங்கநாதன், எல்ஐகே -Love Insurance Kompany எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்க செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், ரௌடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. அனிருத் இதற்கு இசையமைத்திருக்கிறார். சயின்ஸ் பிக்சன் ஜானரில் காதல் படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக கிரித்தி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே. சூர்யா, சீமான், கௌரி கிஷன் ஆகியோரும் நடித்துள்ளனர். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து படத்திலிருந்து முதல் பாடலும், முன்னோட்ட வீடியோவும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அதே சமயம் இப்படமானது இந்த ஆண்டு தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியாகும் என ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டது. தீபாவளி ரேஸில் இருந்து விலகிய 'எல்ஐகே'.... அடுத்த பண்டிகையை டார்கெட் செய்யும் படக்குழு!ஆனால் இப்படம் தீபாவளி ரேஸிலிருந்து விலகிவிட்டதாகவும், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் இந்த படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டு வருவதாகவும் சமீபகாலமாக பல தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதன்படி தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், ‘எல்ஐகே’ திரைப்படமானது இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் திரைக்கு வர அதிக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இதன் மூலம் படக்குழு கிறிஸ்துமஸ் பண்டிகையை டார்கெட் செய்வது போல் தெரிகிறது. இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

MUST READ