சீரியல் நடிகை ரஷிதா மகாலட்சுமி புதிய கார் ஒன்றை வாங்கி உள்ளார்.
சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் தமிழ் ரசிகர் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் ரஷிதா மஹாலட்சுமி. அதையடுத்து அவர் விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் உள்ளிட்ட சேனல்களில் வெளியான தொடர்களில் தொடர்ந்து நடித்து வந்தார்.


சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 6-ல் கலந்துகொண்டு ரஷிதா மிகவும் சிறப்பாக விளையாடினார். 91-வது நாளில் அவர் போட்டியில் இருந்து வெளியேறினார். வெளிவந்த பிறகு, அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது ஷிவினுக்கும் ரஷிதாக்கும் இடையே நல்ல நட்பு ஏற்பட்டது. பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்து ரஷிதா தற்போது எந்த சீரியலும் கமிட்டாகவில்லை. படங்களில் ஏதும் நடிக்கிறாரா என்ற அப்டேட்-ம் கிடைக்கவில்லை.

இந்நிலையில் ரஷிதா புதிய கார் ஒன்று வாங்கி இருப்பதாக தெரிவித்துள்ளார். மோரிஸ் காரேஜ் நிறுவனத்தின் ஹெக்டர் காரை அவர் வாங்கியுள்ளார். அப்போது ஷோ ரூமில் அவருடன் ஷிவின் மற்றும் சீரியல் நடிகர் விஷ்ணு ஆகியோரும் உடன் இருந்தனர்.
