Homeசெய்திகள்சினிமாகமலுக்குப் பிறகு ஹரிஷ் கல்யாண் தான்.... இன்னும் பத்து வருஷத்துல.... மிஸ்கின்!

கமலுக்குப் பிறகு ஹரிஷ் கல்யாண் தான்…. இன்னும் பத்து வருஷத்துல…. மிஸ்கின்!

-

- Advertisement -

இயக்குனர் மிஸ்கின், ஹரிஷ் கல்யாண் குறித்து பேசி உள்ளார்.கமலுக்குப் பிறகு ஹரிஷ் கல்யாண் தான்.... இன்னும் பத்து வருஷத்துல.... மிஸ்கின்!

தமிழ் சினிமாவின் இளம் நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் ஹரிஷ் கல்யாண். பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்த இவர், பியார் பிரேமா காதல், தாராள பிரபு ஆகிய படங்களில் நடித்தார். அதன் பின்னர் இவரது நடிப்பில் வெளியான பார்க்கிங், லப்பர் பந்து ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றி படங்களாக அமைந்தது. எனவே அடுத்ததாக இவர் நடித்திருக்கும் டீசல் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. எனவே வருகின்ற அக்டோபர் 17 தீபாவளி தினத்தை முன்னிட்டு திரைக்கு வரவிருக்கும் இந்த படத்தை காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். அதன்படி சமீபத்தில் வெளியான டிரைலரும் ரசிகர்களின் கவனம் ஈர்த்து இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட மிஸ்கின், ஹரிஷ் கல்யாண் குறித்து பேசி உள்ளார்.கமலுக்குப் பிறகு ஹரிஷ் கல்யாண் தான்.... இன்னும் பத்து வருஷத்துல.... மிஸ்கின்! அதன்படி அவர், “கமல் சாருக்கு பிறகு மிகவும் அழகான நடிகர்களில் ஹரிஷ் கல்யாணும் ஒருவர். இன்னும் பத்து வருடங்களில் அவர் சிறந்த ஹீரோவாக வருவார். அவர் கடினமான உழைப்பாளி, நேர்மையானவர். டீசல் படத்தின் டிரைலரை பார்த்தேன். ஹரிஷ் கல்யாண் வெவ்வேறு அம்சங்களில் இருக்கிறார். மொத்தத்தில் கமர்சியல் படம் எனக்கு பிடிக்கும். நடிகர்களின் தேர்வு அற்புதமாக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ